வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 6 டிசம்பர், 2012

நீதித்துறை விவகாரம்: ஐரோப்பிய ஒன்றியம் விசனம்


ட்டத்தின் ஆட்சி மற்றும் தனியாள் சுதந்திரம் ஆகியன தொடர்பான விடயங்களில் அண்மையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்து கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு விசனமுற்றுள்ளது.
கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழு மற்றும் இலங்கையிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவராலயங்களின் தலைமை அதிகாரிகளின் உடன்பாட்டுடன் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "நீதித்துறையின் சுயாதீனம் பாதுகாக்கப்படுவதுடன் வெலிக்கடை சிறைச்சாலை இடம்பெற்ற பெருமளவான மரணங்களை விரைவாகவும் பாரபட்சமின்றியும் விசாரிக்கப்பட வேண்டும். எந்தவித தடையுமின்றி மாணவர்கள், ஊடகவியலாளர்கள், எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் உள்ளடங்கலாக சகல பிரஜைகளும் தமது அடிப்படை உரிமைகளை அனுபவிப்பதை இலங்கை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் எதிர்பார்க்கின்றது. பொதுநலவாயத்தின் செயலாளர் நாயகம், நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் ஆகியோரின் சுதந்திரம் பற்றிய ஐ.நா விசேட அறிக்கையாளர் மற்றும் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு அடங்கலாக பல உள்நாட்டு மற்றும் சர்வதேச செயற்பாட்டாளர்களும் தமது விசனத்தை வெளிப்படுத்தியுள்ளதை ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழு கவனத்தில் எடுத்துள்ளது" -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’