கொழும்பு வெலிக்கடைச்சிறைசாலையில் இடம்பெற்ற மோதலின் போது தப்பியோடிய சிறைக் கைதிகளில் நால்வர் இதுவரை கைது செய்யப்படவில்லை.
இவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் தொடர்பான அனைத்து விபரங்களும் சிறைச்சாலைகள் திணைக்களத்திடம் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜெயக்கொடி தெரிவித்தார். தப்பியோடிய இவ் நான்கு கைதிகள் தொடர்பான விபரங்கள் அனைத்து பொலிஸ் நிலையங்களிற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற வெலிக்கடை சிறைச்சாலை மோதலின் போது 27 கைதிகள் உயிரிழந்தனர். அன்றைய மோதலின் போது ஐந்திற்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச் சென்றதாக முன்னர் குறிப்பிடப்பட்டது. எனினும் தப்பிச் சென்ற கைதிகள் தொடர்பான விபரங்களில் முரண்பாடான கருத்துக்களே நிலவுகின்றது. இந்நிலையில் கடந்த 13 ஆம் திகதி தப்பிச் சென்ற கைதிகளில் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’