
தன்னை நாடாளுமன்றத்தில் அமரவும் வாக்களிக்கவும் அனுமதிக்குமாறு கோரி முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா தாக்கல் செய்திருந்த வழக்கு டிசெம்பர் மாதம் 13ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது மனுதாரரான சரத் பொன்சேகா சார்பில் ஆஜரான சலிய பீரிஸ், பொன்சோகாவை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி விடுத்த கட்டளையின் பிரதியை தாங்கள் கேட்டும் அந்த பிரதி இன்னும் தமக்கு தரப்படவில்லை என நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.
இதனை அடுத்து ஆவணங்கள் அடங்கிய கோவையை நீதிபதி பார்வையிட்டார். அந்தக் கோவையில் குறித்த ஆவணம் இணைக்கப்பட்டுள்ளதால்; அந்த ஆவணத்தின்; சான்றுப்படுத்திய பிரதியை சட்டத்தரணிக்கு வழங்குமாறு பதிவாளருக்கு உத்தரவிட்டு வழக்கை டிசெம்பர் மாதம் 13ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’