வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 30 நவம்பர், 2012

சர்வதேச நிலைப்பாடுகள், ஐ.நா. அறிக்கைகளை பரிசீலிக்காது அவற்றை நிராகரிப்பது நாட்டுக்கு பாதகமானது : சம்பந்தன் எம்.பி.


லங்கை தொடர்பிலான சர்வதேசத்தின் நிலைப்பாடுகளையும் ஐ.நா.வின் அறிக்கைகளையும் எந்தவித பரிசீலனைக்கும் உட்படுத்தாதவகையில் அவற்றை முற்றுமுழுதாக நிராகரிப்பதானது நாட்டுக்கே பாதகமான விளைவுகளையே ஏற்படுத்துமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று பாராளுமன்றத்தில் எச்சரிக்கை விடுத்தார். இறுதிக்கட்ட யுத்த படுகொலைகள் தொடர்பில் இராணுவமே விசாரணைகளை மேற்கொள்வது பொறுப்புக் கூறும் தன்மை கிடையாது, அத்துடன் அரசியல் தீர்வு விவகாரம் மற்றும் இறுதிக்கட்ட யுத்தத்தில் இடம்பெற்றவை ஆகிய அனைத்தையும் அரசாங்கம் மூடி மறைத்து விடுவதற்கே செயற்பட்டு வருகின்றது என்றும் அவர் விசனம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வெளிவிவகர அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். சம்பந்தன் எம்.பி. இங்கு மேலும் கூறுகையில், சர்வதேசத்துடனான உறவுகள் மற்றும் நிலைப்பாடுகள் தொடர்பில் நாம் கரிசனை கொண்டவர்களாக இருக்கின்றோம் எமது நாட்டின் மீது எழுந்துள்ள சர்வதேச நிலைமைகளுக்கு காரணமே உள்நாட்டுப் பிரச்சினையாகும். இலங்கை விவகாரம் தொடர்பில் வெளியிடப்பட்ட ஐ.நா. அறிக்கை விடயத்தில் பதிலளிக்க வேண்டிய கடப்பாடு அரசாங்கத்துக்கு இருந்த நிலையில் அரசோ ஒரு பக்கச்சார்பான போக்கினைக் கடைப்பிடித்து வருகின்றது. ஐக்கிய நாடுகளிலிருந்து வெளியாகின்ற அறிக்கையினை ஒட்டுமொத்தமாகவே நிராகரிப்பதென்பது நாட்டுக்கு நன்மையானதாக அமையாது என்றார். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’