இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஐ.கே. குஜ்ரால் இன்று டெல்லியில் காலமானார். அவருக்கு வயது 92.
சிறிது காலமாக நுரையீரல் கோளாறு காரணமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர், வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.31 மணிக்கு டெல்லியை அடுத்த குர்காவ்னில் உள்ள ஒரு மருத்துவமனையில் காலமாகிவிட்டதாக உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே நாடாளுமன்றத்தில் அறிவி்ததார்.
அவரது மறைவுக்கு இரங்கள் தெரிவித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. பிரதமர் உள்பட பல்வேறு தலைவர்கள் இரங்கள் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய முன்னணி அரசுக்குத் தலைமை வகித்த குஜ்ரால், 1997 ஏப்ரல் முதல் 1998 மார்ச் வரை 11 மாதங்கள் பிரதமராகப் பதவி வகித்தார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து 1980-களின் மத்தியில் விலகிய குஜ்ரால், பின்னர் ஜனதா தளம் கட்சியில் சேர்ந்தார்.
முதலில், தேவே கெளட தலைமையில் இருந்த அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக காங்கிரஸ் கட்சி மிரட்டியதை அடுத்து, குஜ்ரால் பிரதமராக்கப்பட்டார். தேவே கெளட அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த குஜ்ரால், தகவல் தொழில்நுட்பம், செய்தி, ஒலிபரப்புத்துறை உள்பட பல்வேறு பதவிகளை வகித்திருக்கிறார்.
முதலில் 1964-ம் ஆண்டிலேயே நாடாளுமன்ற உறுப்பினரானார். ரஷ்யாவுக்கான இந்தியத் தூதராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.
குஜ்ராலின் பெற்றோர் சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்தவர்கள். அவரும் தனது 11-வது வயதிலேயே சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றார்.
-->
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’