வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 1 டிசம்பர், 2012

பயங்கரவாதப் புலனாய்வுப் பொலிசாரால் யாழ் தமிழ் மாணவர்கள் தடுத்துவைப்பு


கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நான்கு மாணவர்கள், கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இவர்கள் நால்வரையும் கொழும்புக்கு அழைத்துவருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் தற்போது அவர்களிடம் வவுனியா பிரதேசத்தில் வைத்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார். ஸ்ரீடெலோ காரியாலத்தின் மீது பெற்றோல் குண்டு வீசியதாக சந்தேகத்தின் பேரில் மேற்படி நான்கு மாணவர்களும் கோப்பாய் பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டிருந்தனர். யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தின் நான்காம் ஆண்டு மாணவர்களான பிரசாந்த், ஜெனமஜெயந்த், விஞ்ஞான பீடத்தின் மூன்றாம் ஆண்டு மாணவரான சொலமன் மற்றும் மருத்துவ பீடத்தைச் சேர்ந்த சுதர்சன் ஆகியோரே கைது செய்யப்பட்டவர்களாவர். இவர்களில் இருவர் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகலும் ஏனைய இருவரும் நேற்றிரவும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தியதன் பின்னரே இவர்கள் நால்வரையும் கொழும்புக்கு அழைத்துவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். திருநெல்வேலியில் அமைந்துள்ள ஸ்ரீடெலோ காரியாலயத்தின் மீது கடந்த புதன்கிழமை அதிகாலை பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’