வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 7 நவம்பர், 2012

மற்றுமொரு புகலிடக் கோரிக்கையாளர் குழு திருப்பியனுப்பட்டது


மேலும் புகலிடம் கோரி அவுஸ்திரேலியாவுக்கு வரும் எண்ணத்தை மழுங்கச் செய்யும் வகையிலான கடுமையான நடவடிக்கையாக படகு மூலம் வந்த மேலும் ஒரு குழுவை அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கைக்கு திருப்பியனுப்பியுள்ளது. தாமாக விரும்பி வராதவர்களைக் கொண்ட இந்த குழுவிலுள்ள 30 தனியான ஆண்கள் (கிறிஸ்மஸ் தீவிலிருந்து) வாடகை விமானம் ஒன்றில் கட்டாயப்படுத்தி இன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பல்வேறு படகுகள் மூலம் அண்மையில் அவுஸ்திரேலியாவுக்கு வந்தவர்கள். இவர்கள் அவுஸ்திரேலியாவின் சர்வதேச கடப்பாடுகள் குறித்து எதுவும் பேசவில்லை என குடிவரவு அமைச்சர் கிறிஸ் போவன் கூறினார். பொருளாதார அகதிகளை அவுஸ்திரேலியா ஏற்கமாட்டாது என்ற செய்தியை அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை தெளிவாக அறிவிக்கும் எனவும் கிறிஸ் போவன் தெரிவித்துள்ளார். தாமாக விரும்பித் திரும்பாதவர்களுக்கு உதவியேதும் கிடைக்காது எனவும் அவர் கூறினார். இதேவேளை, இவ்வாறாக கட்டாயமாக திருப்பியனுப்புவதை பசுமை கட்சியினர் கண்டித்துள்ளனர். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’