வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 7 நவம்பர், 2012

ஒன்றாகவே உயர்வோம், ஒன்றாகவே தாழ்வோம்: ஒபாமா


நாம் அமெரிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். நாம் ஒன்றாகவே உயர்வோம். ஒன்றாகவே தாழ்வோம் என அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாவது தடவையாகவும் வெற்றி பெற்றுள்ள ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பராக் ஒபாமா இரண்டாவது தடவையாகவும் வெற்றி பெற்ற பின் தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். பராக் ஒபாமா குடியரசுக் கட்சியின் வேட்பாளரை தோற்கடித்து இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இந்த போட்டியில் வெல்வதற்கு தேவையான தேர்தல் கல்லூரி வாக்குகள் 270 இலும் கூடுதலாக பராக் ஒபாமா பெற்றிருந்தார். புளோரிடா மாநிலத்தின் 29 வாக்குகளும் யாருக்கு என்பது தெரியாத நிலையிலும் ஒபாமா 303 தொகுதி வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்துள்ளார். றொம்னி தொகுதி 206 வாக்குகளை மாத்திரமே பெற்றுள்ளார். வெற்றியீட்டியதன் பின்னர் பராக் ஒபாமா மேலும் உரையாற்றுகையில், 'இந்த நாட்டை முன்நோக்கி கொண்டுசெல்வதற்கு நாம் சேர்ந்து வேலை செய்யக்கூடிய வாய்ப்புக்களையிட்டு மிட் றொம்னியுடன் பேசவுள்ளேன். கூடுதல் உறுதியுடனும் கூடுதல் உற்சாகத்துடனும் மீண்டும் வெள்ளை மாளிகை செல்லவுள்ளேன. வரவு – செலவுத்திட்டக் குறையை குறைக்கவும் வரிவிதிப்பு நெறியை வகுத்துக்கொள்ளவும் குடிவரவு முறைமையை திருத்தியமைக்கவும் காங்கிரஸிலுள்ள குடியரசுக் கட்சித் தலைவர்களுடன் சேர்ந்து வேலை செய்யப்போகின்றேன்' என்றார். இதேவேளை, எனது வழியில் உங்கள் நம்பிக்கைகளை நிறைவேற்றி நாட்டை முன்னெடுத்துச் செல்ல நான் விரும்பினேன். ஆனால் நாடு வேறு தலைவரை தெரிந்துள்ளது. எனவே அவருக்காகவும் இந்த நாட்டுக்காகவும் முழு மனதுடன் பிரார்த்திப்பதில் நானும் உங்களோடு சேர்ந்துகொள்கின்றேன் என மிட் றொம்னி தெரிவித்துள்ளார். அமெரிக்க அரசியலமைப்பின்படி ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதன் சனத்தொகைக்கேற்ப ஜனாதிபதி தெரிவுக்கான வாக்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒரு மாநிலத்தில் கூடுதல் வாக்கைப் பெறுபவருக்கு ஒதுக்கிய முழுவாக்கும் போய்விடும். மற்றவருக்கு ஒரு வாக்குக்கூட கிடையாது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’