வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 7 நவம்பர், 2012

நவநீதம்பிள்ளை ஜனவரியில் இலங்கை விஜயம்


க்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தலைமையிலான குழுவொன்று எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவிருக்கின்றது.
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையகத்தில், அமெரிக்காவால் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எந்தளவுக்கு செயற்படுத்தப்பட்டுள்ளது என்பதைக் கண்டறிவதற்காக ஐ.நா. மனித உரிமை ஆணையகத்தின் சார்பில், தனது தலைமையிலான குழு இலங்கை பயணிக்கவுள்ளது என்று நவநீதம்பிள்ளை அறிவித்துள்ளார். ஜெனீவாக்கு பயணமாகியுள்ள தி.மு.க பிரதிநிதிகளான மு.க.ஸ்டாலின் மற்றும் டி.ஆர்.பாலு ஆகியோரை சந்தித்து கலந்துரையாடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன், 'இலங்கைத் தமிழர் விடயம் தொடர்பில் நிறைவேற்றப்பட்டுள்ள டெசோ தீர்மானங்கள் குறித்து ஐ.நா. பொதுச் செயலாளருடன் விவாதித்து, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்' என்றும் நவநீதம்பிள்ளை உறுதியளித்துள்ளார் என்று தி.மு.க தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. (தற்ஸ்தமிழ்)

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’