வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 17 அக்டோபர், 2012

ஆளும் கூட்டமைப்பின் பிரதேசசபையில், கூட்டமைப்பின் இரு சபைகளுக்கு எதிரான தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது...!



மிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அதிகாரத்தில் உள்ள வலிகாமம் தெற்கு பிரதேசபையின் செயலாளர் சுலோஜனா முருகநேசன் மற்றும் வலிகாமம் கிழக்கு பிரதேசசபையின் செயலாளர் ஜெயந்தா சோமராஜ் ஆகியோருக்கு எதிராக அச்சபைகளின் ஆளும் கூட்டமைப்புத் தவிசாளர்களால் கொண்டு வரப்பட்ட கண்டனத் தீர்மானங்களை எதிர்த்து பருத்தித்துறை பிரதேசசபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
பருத்தித்துறை பிரதேசசபையின் மாதாந்தக் கூட்டம் நேற்று தவிசாளர் பூ.சஞ்சீவன் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்ச்சி நிரலி;ன்படி கூட்டம் நடைபெற்றது. கடந்த மாதக் கூட்ட அறிக்கை அங்கீகாரத்திற்காக கோரப்பட்ட போது கூட்ட அறிக்கை பிழை என  பிரதேச சபை உறுப்பினர் தம்பிராசா மணீதரன் சுட்டிக் காட்டினார்.

கடந்த மாதம் (18.09.2012) நடைபெற்ற கூட்டத்தில் சபையின் எதிர்க்கட்சித்தலைவர் ஐயாத்துரை சிறிரங்கேஸ்வரன், வலிகாமம் கிழக்கு மற்றும் வலிகாமம் தெற்கு பிரதேசசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் சபைச் செயலாளர்களுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களைக் கண்டித்து பிரேரணையை முன்மொழிந்து உரையாற்றினார். அதில் வலிகாமம் கிழக்கு மற்றும் தெற்கு பிரதேசசபையின் அரச பெண் உயரதிகாரிகளான, செயலாளர்களுக்கு எதிராக ஆளும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புத் தவிசாளர்களாலும் கூட்டமைப்பு உறுப்பினர்களாலும், அவர்களின் சேவை, அர்ப்பணிப்பு, நெறிப்படுத்துகைகளை இழிவுபடுத்தும் வகையில் கண்டனத் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளனர். இது மிகவும் கண்டனத்துக்குரிய செயல். உள்ளுராட்சித் திணைக்களச் சட்ட திட்டங்களுக்கு அமைவாக செயற்படும், செயற்படுத்தும் அல்லது நெறிப்படுத்தும், உயர் அதிகாரிகளாக செயலாளர்கள் செயற்படுகின்றார்கள். அவர்கள் கடந்த 30 ஆண்டு கால யுத்தத்தின் மத்தியில் இம்மண்ணிலே தொடர்ந்து இருந்து பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியிலும் படித்துப் பட்டம் பெற்று மேலும் இலங்கை நிர்வாக சேவைப் பட்டம் பெற்ற பின்னரே இவ்வாறான உயரிய பொறுப்புகளுக்கு வருகின்றார்கள். அவர்கள் உள்ளுராட்சித் திணைக்களச் சட்ட திட்டங்களுக்கு அமைவாக செயற்பட முடியும். அவர்களிடத்தில் குறைபாடுகள் காணப்பட்டால், அதனை உள்ளுராட்சி ஆணையாளர், பிரதம செயலாளர், ஆளுநர், அல்லது உள்ளூராட்சி அமைச்சரிடத்தில் முறைப்பாடுகளை மேற்கொண்டு தீர்வு காணலாம். அதனை விடுத்து அவர்கள் மீது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அபகீர்த்தி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 05 வருடத்தில் மாற்றங்கள் சபைகளுக்கு வருகிறது. ஆனால் 60 வயது வரை சேவையாற்றும் உயர் அதிகாரிகள் மீது தமது அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்துள்ளனர். இதனை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன் எனத் தெரிவித்து பிரேரணையைச் சமர்ப்பித்தார். அப்பிரேரணையை ஆதரித்து பிரதேச சபை உறுப்பினர் தம்பிராசா மணீதரன் வழிமொழிந்தார். ஆனால் கூட்டக் குறிப்பு புத்தகத்தில் உறுப்பினரின் பெயர் பதிவு செய்யப்பட்டிருந்த போதும் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட கூட்ட அறிக்கையில் அது குறிப்பிடப்படவில்லை.
ஆனால் தவிசாளர் குறித்த தீர்மானம் நிறைவேறவில்லை என வாதிட்டார்.
ஆனால் உபதவிசாளரும் உறுப்பினர்களும் பலத்த விவாதங்களின் பின்னர் விடயங்களைத் தெளிவு படுத்திய பின் தவிசாளர் ஏற்றுக் கொள்வதாக ஒப்புக் கொண்டார். தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது. அத்துடன் இத்தீர்மானத்தை செய்தியாக வெளியிட்ட ஊடகத்திற்கு எதிராக தவிசாளரால் கொண்டுவரப்படவிருந்த கண்டனமும் கைவிடப்பட்டது.


-->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’