வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 17 அக்டோபர், 2012

வாழ்வின் எழுச்சி (திவிநெகும) சட்டமூலத்தை வடமாகாணத்தில் நிறைவேற்றுவது தொடர்பிலான ஜனாதிபதியின் மனு அமைச்சர் பெற்றுக் கொண்டார்.



வா ழ்வின் எழுச்சி (திவிநெகும) சட்டமூலத்தை வடமாகாணத்தில் நிறைவேற்றுவது தொடர்பிலான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களுக்கான மனுவினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பெற்றுக்கொண்டார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன) யாழ்.மாவட்ட செயலக முன்றலில் இன்றைய தினம் இடம்பெற்ற நிகழ்விலேயே இம்மனு கையளிக்கப்பட்டது.

யாழ்.மணிக்கூட்டு சந்தியிலிருந்து ஆரம்பமான பேரணி பிரதான வீதிவழியாக மாவட்ட செயலக முன்றலில் நிறைவு பெற்றது.

அங்கு மாவட்ட சமூர்த்தி இணைப்பாளர் ரகுநாதன் தலைமையில் நடைபெற்ற மனுகையளிக்கும் நிகழ்வில் மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் உரையாற்றும் போது, வாழ்வின் எழுச்சி (திவிநெகும) திட்டத்தின் ஊடாக இம்மாவட்டத்தின் பல்லாயிரக்கணக்கான மக்கள் நன்மையடைந்து வரும் நிலையில் இந்நாட்டில் வாழும் மக்களது மேம்பாட்டிற்காக இத்திட்டம் அமுலாக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டு வருவதாகவும், மேற்படி மனு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடாக உரியவர்களிடம் கையளிக்கப்பட்டு அதன்ஊடாக நல்ல பயன்கிட்டுமெனவும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், மக்களுடன் இருந்து மக்களுக்காகவே நான் சேவையாற்றி வரும் நிலையில் மக்களது பிரச்சினைகளை தீராப்பிரச்சினைகளாகக் கொண்டு சுயலாபம் தேடும் அரசியல்வாதிகள் செயற்பட்டு வருவதாகவும் இதுவிடயத்தில் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டதுடன் கடந்த கால அரசியல் தலைமைகளின் தவறான வழிநடத்தல்கள் காரணமாகவே எமது மக்கள் சொல்லொண துன்பங்களை அனுபவித்து வந்ததாகவும், யுத்தத்திற்கு இனிமேல் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லையெனவும் தெரிவித்த அவர், மக்களது இம்மனு தொடர்பில் பாரபட்சமற்ற முறையில் ஜனாதிபதி அவர்களுடன் கலந்துரையாடி உரிய தீர்வு பெற்றுத்தரப்படுமெனவும் உறுதிமொழி வழங்கினார்.

அத்துடன் வீட்டுத்தோட்டம் மக்களின் ஒளிமயமான வாழ்வுக்காகவும், அவர்கள் சுய கௌரவமான வாழ்விற்காகவும் எமது முழுமையான பங்களிப்பு வழங்கப்படுமெனவும் அவர் இதன்போது உறுதிபடத் தெரிவித்தார்.

இதன்போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கு மனுக்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், இதன்பிரதிகள் ஈ.பி.டி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின் (உதயன்) மாவட்ட அரச அதிபர், ஆகியோருக்கும் வழங்கிவைக்கப்பட்டன.

இந்த மனுகையளிக்கும் நிகழ்வில், சமூர்த்தி உத்தியோகத்தர்கள், பயனாளிகள் உட்பட பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.








-->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’