ஐக்கிய தேசிய கட்சியின் முடிவெடுக்கும் சக்திகள் வெட்கப்பட வேண்டும் என்று முன்னாள் இராணவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தார். 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது பொது எதிரணியின் வேட்பாளராக களமிறங்கிய பொன்சேகா, தவறிழைத்துவிட்டதாக ஐ.தே.க.வின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த போதே சரத் பொன்சேகா, மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தேர்தலின் போது நாடளாவிய ரீதியில் சென்றவர்கள், மக்களிடம் வாக்களிக்குமாறு கோரினர். மூன்று வருடங்களுக்கு பின்னர் இன்று அது தவறெனக் கூறுகின்றனர். இவ்வாறானதொரு கட்சியை உண்மையான கட்சியென எவ்வாறு ஏற்பது? நாளை இடம்பெறவுள்ள மக்கள் பேரணியின் பின்னணியில் ஜனாதிபதியின் ஆசி உள்ளது என கூறப்படுகின்றது. இந்த பேரணிக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் யார்? என்பது குறித்து எங்களுக்கு சில கேள்விகளும் சந்தேகங்களும் எழுகின்றன. எதிரணியில் இருக்கின்ற சகலரும் இந்த பேரணியில் பங்குபற்றினால் நாம் ஏற்றுக்கொள்வோம் என்று சரத் போன்சேகா மேலும் குறிப்பிட்டார். -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’