அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் புதல்விகளான மாலியா (வயது 14), சாஷா (வயது 11) ஆகியோர் கல்வி பயிலும் பாடசாலைக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 6ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையிலேயே இக்கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. தலைநகர் வொஷிங்டனிலுள்ள 'சித்வெல்பிரண்ட்ஸ்' என்ற தனியார் பாடசாலையிலேயே இவர்கள் கல்வி பயின்றுவருகின்றனர். இப்பாடசாலைக்கே தொலைபேசியில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இப்பாடசாலையிலிருந்து மாணவர்களின் உடைமைகள் சோதனையிடப்பட்டதுடன், மாணவர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இருப்பினும் ஆபத்தான பொருள் எதுவும் இருக்கவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’