வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 19 அக்டோபர், 2012

மாணவி மீதான பாலியல் குற்றம்: சங்கீத ஆசிரியருக்கு எட்டு வருட கடூழியம்



பா லியல் வல்லுறவு தொடர்பான குற்றச்சாட்டொன்றின் பேரில் ஆசிரியரொருவர், மொனராகலை மேல் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதும், அவ் ஆசிரியர் தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினை நீதிபதி முன்னிலையில் ஒப்புக் கொள்ளவே நீதிபதி அவருக்கு எட்டு வருட கடூழிய சிறைத்தண்டனை மற்றும் இழப்பீடு உள்ளிட்டு அபராதத்தையும் செலுத்தும் படி உத்தரவிட்டார்.
இவ்வழக்கு நேற்று 18 ஆம் திகதி மொனராகலை மேல் நீதிமன்றில் நீதிபதி எம். குலதுங்க முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. மொனராகலை பிரபல அரச பாடசாலையொன்றில் சங்கீத கலாநிதி பட்டம் பெற்ற சங்கீத ஆசிரியர் ஒருவருக்கே மேற்படி தண்டனை வழங்கப்பட்டன. இவ் ஆசிரியர் மாணவியொருவருக்கு சங்கீதம் கற்பிக்க தமது உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்திற்கு வருமாறு கூறி அவ் வாசஸ்தலத்தில் வைத்து அம் மாணவியை பாலியல் வல்லுறவிற்குட்படுத்தியுள்ளார். இச்சம்பவம் 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி நடைபெற்றுள்ளது. இப் பாலியல் வல்லுறவு தொடர்பான புகாரொன்றினையடுத்து சங்கீத ஆசிரியர் மொனராகலை பொலிசாரினால் கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. அவ் வழக்கின் போதே குறிப்பிட்ட சங்கீத ஆசிரியர் நீதிபதி முன்னிலையில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினை ஒப்புக்கொண்டார். நீதிபதி அவ் ஆசிரியருக்கு எட்டு வருட கடூழிய சிறைத் தண்டனை மற்றும் இருபத்தையாயிரம் ரூபா அபராதத்தையும் விதித்ததோடு, பாதிக்கப்பட்ட மாணவிக்கு மூன்று இலட்சம் ரூபாவினை இழப்பீடாக வழங்கும் படியும் உத்தரவிட்டார். இருபத்தையாயிரம் ரூபா அபராதம் செலுத்தாத பட்சத்தில் மேலும் மூன்று வருடங்களுக்கு கடூழிய சிறைத் தண்டனை நீடிக்குமென்றும், இழப்பீடு வழங்கப்படாத பட்சத்தில் மேலும் ஐந்து வருடங்களுக்கு கடூழிய சிறைத்தண்டனை நீடிக்குமென்றும் வழக்கு தீர்ப்பின்போது நீதிபதி தெரிவித்தார். இவ்வழக்கின் போது வழக்காளி தரப்பில் மொனராகலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் சட்டத்தரணி தினுச ஒப்பநாயக்க ஆகியோர் ஆஜராகியிருந்தனர். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’