வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 19 அக்டோபர், 2012

நித்தியானந்தா நீக்கம்: மதுரை ஆதீனம் அதிரடி



துரை ஆதீனத்தின் இளைய பீடாதிபதியாக சில மாதங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய நித்தியானந்தாவை, அந்தப் பதவியில் இருந்து திடீரென நீக்கியிருக்கிறார் மதுரை ஆதீனகர்த்தர் அருணகிரிநாதர்.
பொதுமக்கள், பக்தர்கள் இந்த நியமனத்தை விரும்பவில்லை. அரசு விரும்பவில்லை. நீதிமன்றமும் விரும்பவில்லை. அவரே ராஜிநாமா செய்ய இருப்பதாக நேற்று சொல்லியிருந்தார். வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் வேண்டாம் என்று வழக்கறிஞர் கூறிவிட்டார். அதனால், வேறுவழியின்றி அவரை நீக்கினேன்’’ என்றார் அருணகிரிநாதர். நித்தியானந்தாவை நீக்குமாறு அழுத்தங்கள் ஏதாவது வந்ததா என்று கேட்டபோது, அவ்வாறு எந்த அழுத்தமும் வரவில்லை என்றும், தான் சுயமாகத்தான் இந்த முடிவை எடுத்ததாகவும் அருணகிரிநாதர் தெரிவித்தார். இந்த முடிவு குறித்து நித்தியானந்தாவுக்குத் தெரியும் என்று கூறிய அருணகிரிநாதர், அதுபற்றி நித்தியானந்தா என்ன சொன்னார் என்பதை வெளியிட மறுத்துவிட்டார். வருத்தமில்லை: நித்தியானந்தா மதுரை ஆதீனகர்த்தரின் முடிவில் தனக்கொன்றும் மனவருத்தமில்லை என நித்தியானந்தா கூறியிருக்கிறார். அவரை இளைய பீடாதிபதி பதவியிலிருந்து ஆதீனகர்த்தர் அருணகிரி நீக்கியதாக செய்திகள் வெளியான நிலையில், திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசிய நித்தியானந்தா, தானே விலகுவதென்று முடிவுசெய்திருந்ததாகவும் ஓரிரு நாட்களில் அதை அறிவிக்கவிருந்ததாகவும் இப்போது ஆதீனகர்த்தரே விலக்கியிருக்கிறார் என்றும், எனவே அது தனக்கொன்றும் அதிர்ச்சியில்லை என்றும் கூறியிருக்கிறார். தன்னால் மதுரை ஆதீனத்திற்கு எவ்வித பிரச்சினைவருவதையும் தான் விரும்பவில்லை என்றும் தனக்கு திருஞானசம்பந்தர் மீது அளவுகடந்த மரியாதையும் பக்தியும் உண்டு, எனவே அவர் உருவாக்கிய மடத்தின் மீதும் அம்மரியாதை தொடரும் எனவும் நித்தியானந்தா கூறியிருக்கிறார். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’