இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஜந்த மென்டிஸ் மலேசியாவில் கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றியுள்ளார்.
அஜந்த மென்டிஸ் காயமடைந்துள்ளதாக இலங்கைக் கிரிக்கெட் சபை அறிவித்துள்ள நிலையிலேயே அவர் கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் போட்டிகளில் கழக மட்டத்தில் விளையாடுவதற்காக இலங்கை இராணுவத்தில் இணைந்திருந்த அஜந்த மென்டிஸ், மற்றொரு வீரரான சீக்குகே பிரசன்னா ஆகியோர் இலங்கை இராணுவ அணிக்காக மலேசியாவில் கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றியுள்ளனர். இலங்கை இராணுவ அணி சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டிகளுக்காக மலேசியா சென்றுள்ளதுடன், அங்கு சென்ற இராணுவ அணியின் தலைவராக அஜந்த மென்டிஸ் செயற்பட்டுள்ளார். 3 போட்டிகளில் அங்கு இராணுவ அணி போட்டிகளில் பங்குபற்றியுள்ளது. இராணுவ அணி பங்குபற்றிய 3 போட்டிகளில் 2 போட்டிகளில் வெற்றியையும், மற்றைய போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டு முடிவு பெறப்படாத போட்டியாகவும் மாறியிருந்தது. இலங்கை அணி ரோயல் மலேசியன் விமானப்படை அணியை 7 விக்கெட்டுக்களால் வெற்றிகொண்டதோடு, மலேசிய கிரிக்கெட் சபையின் ஜனாதிபதி அணியை 170 ஓட்டங்களால் வெற்றிகொண்டிருந்தது. மலேசியப் படை வீரர்களுக்கெதிரான போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டிருந்தது. அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்த நியூசிலாந்து அணிக்கெதிரான டுவென்டி டுவென்டி போட்டி மற்றும் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான அணியில் அஜந்த மென்டிஸ் காயம் காரணமாக சேர்த்துக் கொள்ளப்படவில்லை என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது -->

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’