த மிழ் மக்களின் உணர்வுகளை வேண்டுமென்றே நோகடிக்கும் நோக்கத்தில் இலங்கை அரசாங்கம் இறுதி யுத்தம் நடந்த இடத்தில் நினைவுச் சின்னம் ஒன்றை அமைத்திருப்பதை கண்டித்த தி.மு.க தலைவர் மு.கருணாநிதி, இவ்வாறான சின்னங்கள் இலங்கை அரசாங்கம் எடுத்திருப்பதாக கூறும் சமாதான முயற்சிகளுக்கு உதவியாக இருக்காது எனவும் கூறியுள்ளார்.
நினைவுச் சின்னமும் யுத்த நூதனசாலையும் இலங்கை அரசாங்கத்தின் அநாகரிக செயற்பாடாகும். இது இலங்கை அரசாங்கம் எடுத்திருப்பதாகக் கூறும் சமாதான முயற்சிகளுக்கு உதவ மாட்டாது என கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக 2009இல் நடந்த யுத்தத்தின் இறுதிக் கட்டம் நடந்த இடத்துக்கு அண்மையில் அமைந்துள்ள யுத்த நினைவுச் சின்னம் மற்றும் நூதனசாலை பற்றி கருத்து வெளியிட்டுள்ள அவர், ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான சிங்கள மக்கள் நினைவுச் சின்னங்களைப் பார்ப்பதற்கென செல்வதை அறிந்தபோது வேதனையாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். தனது தலைமையிலான தமிழீழ ஆதரவு நிறுவனம், 14 தீர்மானங்களை நிறைவேற்றியிருப்பதாகவும் இவற்றை கட்சியின் சிரேஸ்ட தலைவர்களான எம்.கே.ஸ்டாலின் மற்றும் டி.ஆர் பாலு ஆகியோர் இம்மாத இறுதியில் ஐ.நா.விடம் சமர்ப்பிப்பர் என்றும் கூறினார். இலங்கை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இந்தியா தொடர்ந்தும் பயிற்சி வழங்கும் என இலங்கை அமைச்சர் ஒருவர் கூறியிருப்பதையிட்டு மத்திய அரசாங்கள் மௌனம் காப்பது ஏன் என கருணாநிதி வினவியுள்ளார். இந்திய அரசாங்கத்தின் சில நடவடிக்கைகள், உலகிலுள்ள நடுநிலை நாடுகளில் ஒன்றாக இருப்பதில் மட்டுமே இந்தியாவுக்கு அக்கறை உள்ளதா என்னும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது என அவர் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார். -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’