வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 24 அக்டோபர், 2012

முன்னாள் போராளிகள் 350பேர் படையில் இணைப்பு



மு ன்னாள் விடுதலைப் போராளிகளில் 350பேர் சிவில் பாதுகாப்பு படையில் இணைக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களைச் சேர்ந்த முன்னாள் போராளிகளில் 350பேரே இவ்வாறு படையில் இணைக்கப்பட்டதாக சிவில் பாதுகாப்பு படை தெரிவித்தது.
இனிவரும் நாட்களில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முன்னாள் போராளிகளையும் சிவில் பாதுகாப்பு படையில் இணைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அப்படையின் வட பிராந்தியப் பொறுப்பதிகாரி மேஜர் அனில் பண்டார தெரிவித்தார். இந்நிலையில், மேற்படி போராளிகள் உள்ளடங்களாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவைச் சேர்ந்த சுமார் மூவாயிரம் இளைஞர் யுவதிகள் சிவில் பாதுகாப்பு படையில் இணைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார். இவர்களில் 2200 பெண்களும் 800 ஆண்களும் அடங்குகின்றனர். இவர்களை உள்ளடக்கிய விவசாய வேலைத்திட்டமொன்று இன்று புதன்கிழமை, கிளிநொச்சி, அம்பால்நகர் பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்டது. சுமார் 200 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த விவசாயத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மேஜர் அனில் பண்டார மேலும் கூறினார். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’