திவிநெகும திட்டம் மக்களின் மேம்பாட்டுக்கு மிகவும் உறுதுணையாக அமையும். 2012 ஆகஸ்ட் 10 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட திவிநெகும சட்டமூலம் தொடர்பாக எமது மாகாண சபையின் கருத்துகளை தெரிவிக்க வேண்டியுள்ளது. இவ்விடயம் எமது மாகாண சபைக்கு முக்கியமானதொன்றாகும் என கிழக்கு மாகாண முதலமைச்சரல் நஜீப் ஏ. மஜீத் தெரிவித்தார்.
திவிநெகும சட்டமூலத்தை சபையில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். கிழக்கு மாகாண சபை தவிசாளர் ஆரியவதி கலபதி தலைமையில் சபை நேற்றுக் காலை 9.30 மணியளவில் கூடியது. முதலமைச்சர் தொடர்ந்து குறிப்பிடுகையில் கிழக்கு மாகாண மக்கள் கடந்த முப்பது வருடகால யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்களின் பாதிப்பிலிருந்து இன்னும் மீளவில்லை. இம்மக்களின் வாழ்வாதரம் மற்றும் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு எமக்குண்டு. அதற்காக நாம் இன மத பேதமின்றி அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும். இத்தகைய நடவடிக்கைகளுக்கு இம்மாகாண சபையில் உள்ள அனுபவம் வாய்ந்தவர்களின் உதவியும் பங்காளிப்பும் தேவை இதேவேளை ஜனாதிபதியின் மஹிந்த சிந்தனை திட்டங்களுக்கும் நாம் பங்களிப்பு செய்ய வேண்டும். அமைச்சு பசில் ராஜபக்ஷவினால் திவிநெகும சட்ட மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இச்சட்ட மூலம் தொடர்பாக எமது கருத்துக்களையும் சொல்ல வேண்டியுள்ளது. ரஜரட்ட அபிவிருத்தி, தெற்கு அபிவிருத்தி, அதிகார சபை, சமுர்த்தி அதிகார சபை என்பவற்றை இணைத்து திவிநெகும திணைக்களமாக மாற்றும் திட்டமே இச்சட்ட மூலத்தின் உள்ளடக்கமாகும். இத்திட்டம் எம்மக்களுக்கும் பயனளிக்கும் என நம்புகிறோம். எனவே இச்சட்டமூலத்தை ஆராய்ந்து எமது கருத்துக்களையும் வழங்க வேண்டியுள்ளது. கட்சி பேதங்களை மறந்து இச்சட்ட மூலத்துக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு கோருகின்றேன். பாதிக்கப்பட்ட மக்களின் நலன் கருதி இத்திட்டத்தை ஆதரிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’