வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 27 அக்டோபர், 2012

கூட்டமைப்புக்குள் பிரச்சினை இருக்கிறது: சுரேஷ் எம்.பி


மிழ் தேசிய கூட்டமைப்புக்குள் பிரச்சினை இருப்பதை ஏற்றுக்கொண்ட அதன் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி இந்நாட்டின் தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்பு என்ற வகையில் அதன் செயற்பாடுகளை இந்த பிரச்சினை பாதிக்காது என்றும் கூறினார். கூட்டமைப்புக்குள் பிரச்சினை
இருக்கத்தான் செய்கின்றது. இதை தீர்ப்பதற்கான கருத்தாடல்கள் நடந்து கொண்டுள்ளன';. தமிழ் தேசிய கூட்டமைப்பை தனிக்கட்சியாக பதிவு செய்வது பற்றிய பிரச்சினையே இருக்கின்றன. தமிழ் தேசிய கூட்டமைப்பை தனியொரு கட்சியாக பதிவு செய்ய வேண்டுமென்ற கருத்து இருந்தே வந்துள்ளது. ஆனால், இதிலுள்ள அங்கத்துவ கட்சிகள் சில தயக்கம் காட்டுகின்றன' எது எப்படியிருந்தபோதும் தமிழ் தேசிய கூட்டமைப்பு எப்போதும் தமிழ் மக்களை ஒரே குரலில் பிரதிநிதித்துவம் செய்யும். இது எமது நோக்கத்திற்கு தடையாக இருக்காது. தமிழ் மக்களின் நியாயமான அபிலாஷைகளை பெற்றுக்கொடுக்கும் எமது இலக்கு மாறாது' என்றார். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’