வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 27 அக்டோபர், 2012

புகலிட கோரிக்கையாளர்கள் 14 பேர் திருப்பியனுப்பப்பட்டனர்



புகலிட கோரிக்கையாளர்கள் 14 பேரை அவுஸ்திரேலியா திருப்பியனுப்பியுள்ளது என அவுஸ்திரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன.
தங்காலை - குடாவெல்ல பகுதியில் மீன்பிடி படகை கடத்திய நபர்களுக்கே புகலிடம் மறுக்கப்பட்டு மீண்டும் நாட்டுக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர். குறித்த 14 பேரும் மீனவர்கள் சிலரை நடுகடலில் வைத்து கொலை செய்துவிட்டு அவர்களின் படகை கடத்தி; சென்றதாகக் அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. படகு கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை அரசாங்கம், அவுஸ்திரேலியாவிற்கு அறிவித்திருந்தது. இதன்பிரகாரமே படகு மூலம் அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோர முற்பட்டவர்களை அந்நாட்டு குடிவரவு குடியழகழ்வுத் திணைக்களம் நாடு கடத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவின் வடமேற்குப் பகுதியில் வைத்தே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். படகை கடத்திய குறித்த 14 புகலிடக் கோரிக்கையாளர்களும் கொகோஸ் தீவுகளிலிருந்து விசேட விமானம் மூலம்; நாட்டுக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர். குறித்த படகு கடந்த 13ம் திகதி கடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’