இ ன்றைய இளைஞர்கள் முக்கிய பொறுப்புகளைக் கையேற்க வேண்டிய தருணம் இது. எமது இளம் தலைமுறையினரான இளைஞர்களுக்கு அமைச்சரவையில் சந்தர்ப்பம் வழங்கவே எனது அமைச்சுப் பதவியினை ராஜினாமா செய்தேன்' என்று பதிவியை ராஜினாமா செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
இந்திய அமைச்சரவை நாளை ஞாயிற்றுக்கிழமை மாற்றியமைக்கப்படவுள்ளது. இந்நிலையில் வெளிவிவகார அமைச்சர் எஸ்எம்.கிருஷ்ணா, தனது பதவியை நேற்றைய தினம் ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி, சுபோத்காந்த் சகாய் நபி, சமூக நீதித்துறை அமைச்சர் முகுல் வாஷ்னிக் ஆகிய மூவரும் தங்களது அமைச்சுப் பதவிகளை ராஜினாமா செய்வதாக சோனியா காந்தியிடம் கடிதம் கையளித்துள்ளனர். இந்நிலையில் பதவியை ராஜினாமா செய்த எஸ்.எம்.கிருஷ்ணா, இன்று இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்த பின்னர் தனது ராஜினாமா குறித்து ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்தார். அங்கு உரையாற்றிய அவர் கூறுகையில், 'இன்றைய இளைஞர்கள் முக்கிய பொறுப்புகளைக் கையேற்க வேண்டிய தருணம் இது. எமது இளம் தலைமுறையினரான இளைஞர்களுக்கு அமைச்சரவையில் சந்தர்ப்பம் வழங்கவே எனது அமைச்சுப் பதவியினை ராஜினாமா செய்தேன். இந்த முடிவை நானாகத்தான் எடுத்தேன். இதில் என் மனைவியின் பங்களிப்பு அதிகம். இப்போது நான் சுதந்திரமாக இருப்பதாக உணர்கிறேன். கடந்த 3 ஆண்டுகளாக முக்கிய பிரச்சினைகளை கையாள நேர்ந்தது. நான் வெளிவிவகார அமைச்சர் பதவியில் இருந்த காலகட்டத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நல்ல நட்புறவு ஏற்பட்டது. மாநில அரசியலிலும் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். இளைஞர்கள்தான் மாநில தலைமையை ஏற்பார்கள். கட்சித் தலைமைக்கும், தொண்டர்களுக்கும் உறுதுணையாக இருப்பேன்' என்றார். -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’