வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 3 செப்டம்பர், 2012

கிழக்கு மாகாணத்தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் எமது வலாற்று அனுபவங்களை கற்றுக்கொண்டு சிந்தித்து வாக்களிக்க வேண்டும்!...



மிழ் பேசும் மக்களின் அரசியலுரிமை பிரச்சினைக்கான தீர்வு என்ற போர்வையில் இதுவரை காலமும் சுயலாப தமிழ் தலைமைகள் நடத்தி வந்த அரசியல் சூழ்ச்சிகளின் வரலாற்று அனுபவங்களை கற்றுக்கோண்டு, கிழக்கு மாகாண தமிழ் பேசும் மக்கள் தமது வாக்களிக்கும் உரிமையை சரிவரப்பயன்படுத்த வேண்டும் என்று ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஊடகங்களுக்கான அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் அந்த அறிக்கையில்.....
காலத்தின் தேவைகருதி தற்காலிகமாக நாம் கிழக்கு மாகாண தேர்தல்களில் போட்டியிடாவிடினும், நாம் நேசிக்கும் கிழக்கு மாகாண மக்களுக்கும் சிறந்த அரசியல் வழி காட்டலை தெரிவிக்கும் வரலாற்று கடமை எமக்கு உண்டு. இதற்காகவே எமது அரசியல் சமூகப்பணிகள் கிழக்கு மாகாணத்திலும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமை பிரச்சினையின் பேரால் தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ந்தும் பேசி வருவது வெறும் தேர்தல் வெற்றிகளுக்கான வெற்றுக்கோசங்கள் மட்டுமே. 77 இல் தமது பாராளுமன்ற பதவிகளை குறியாக வைத்து தமிழீழ ஆணை கேட்டு பதினெட்டு ஆசனங்களை பெற்றவர்கள் எதை சாதித்தார்கள்?... உணர்ச்சி பொங்க பேசி, எமது மக்களை உசுப்பேற்றி தமது பாராளுமன்ற பதவிகளை பெற்றுக்கொண்டவர்கள் நாட்டை விட்டே தத்தமது குடும்பங்களோடு ஓடிப்போனர்கள். கேட்டது தனிநாடு. கேட்ட தலைவர்களுக்கு கிடைத்தது தமிழ் நாட்டில் தனி வீடுகள்! ஆனால் அவர்களால் உசுப்பேற்றி விடப்பட்டவர்கள் எமது தாயக மண்ணில் இரத்தம் சிந்தி அவலப்பட்டார்கள். இலங்கை இந்திய ஒப்பந்தம் ஒரு பொன்னான வாய்ப்பு. அதை அன்றே ஏற்றுக்கொண்டிருந்தால், அல்லது ஏற்றுக்கொண்டவர்கள் சரிவர நடைமுறைப்படுத்தியிருந்தால் எமது மக்கள் இத்தனை அழிவுகளை அடைய வேண்டிய துயரம் நடந்திருக்காது. 95 இல் முன்னாள் ஐனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அவர்கள்; எமது மக்களுக்கான சிறந்த அரசியல் தீர்வோன்றை முன்வைத்திருந்தார். ஆனாலும், தமது சுயலாபங்களுக்காக சக தமிழ் தலைமைகள் பிரதான எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சி, மற்றும் ஏனைய எதிர்க்கட்சிகளுடனும் இணைந்து ஊர்வலம் நடத்தி, நாடாளுமன்றத்தில் வைத்து அதன் தீர்வு நகல்களை எரித்து அழித்தார்கள். இறுதியாக ஐனாதிபதி மகிந்த ராஐபக்ச அவர்கள் அரசியல் பேச்சு வார்த்தைக்கு வருமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பை கேட்டிருந்தபோது, அதை நானும் வலியுறுத்தி கேட்டிருந்தேன். ஆனாலும், ஒற்றுமையின் பலத்தை உலகிற்கு காட்டுங்கள்,... சர்வதேசத்தின் அங்கீகாரத்துடன் உரிமை பெற்று தருவோம் என மக்களிடம் போலி வாக்குறுதி கொடுத்து,.... மக்களின் வாக்குகளை திருட்டுத்தனமாக அபகரித்து 22 நாடாளுமன்ற உறுப்புரிமைகளை பெற்றிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அரசியல் பேச்சுவார்த்தைக்கு இணங்க மறுத்து தமிழ் பேசும் மக்களை யுத்த களத்திற்கு பலியாக்கி விட்டு தாம் மட்டும் தமது குடும்பங்களோடு தப்பித்து சென்று உலக நாடுகளில் உல்லாசம் நடத்திக்கொண்டிருந்தனர். இவ்வாறு வரலாறு முழுவதும் கிடைத்த சந்தர்ப்பங்களை திட்டமிட்டே தட்டிக்கழித்து தமிழ் பேசும் மக்களின் அழிவுகளுக்கு காரணமானவர்களே தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ளவர்கள். மறுபடியும் இன்று தமிழர்களின் ஒற்றுமையை உலகுக்கு காட்ட தமக்கு வாக்களியுங்கள் என்று கூறும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்களை ஏமாற்றி ஏற்கனவே பல தடவைகள் பெற்ற பதவிகளை வைத்து தமிழ் பேசும் மக்களுக்காக எதை சாதித்திருக்கிறார்கள்?.. தாம் பெற்ற அரசியல் அதிகாரங்களை தமிழ் பேசும் மக்களின் அழிவுக்கு துணைபோகவே பயன் படுத்தியிருக்கிறார்கள். மாறாக தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமை தீர்வுக்காக இதுவரை தமது அரசியல் பலத்தை பயன்படுத்தியிருக்கவில்லை. எமது மக்கள் அவலங்களை சந்திக்க வேண்டும் என்பதும், அதற்காக அரசியல் தீர்வு கிடைத்துவிடக்கூடாது என்பதுமே தமிழ் தேசிய கூட்டமைப்பின் விருப்பம். மக்களின் துயர்களை சொல்லி தமது பதவி நாற்காலிகளை பிடிப்பதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நோக்கம். வெளியே பேசுவது வீர முழக்கம், அரசாங்கத்தின் பின் கதவு தட்டி அரச தலைவர்களோடு உள்ளே பேசிப்பெறுவது தமது சொந்த சலுகைகள். பேசுவது தமிழ்த்தேசியம், பிடிப்பது சிங்கக்கொடி. இதுவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் சுயலாப அரசியல் வரலாறு. தமது சுயலாபங்களுக்காக அரசுடன் உள்ளே உறவு வைத்துக்கொண்டு வெளியே வீரம் பேசும் போலியான எதிர்ப்பு அரசியல் மூலம் தமிழ் பேசும் மக்களுக்கான அபிவிருத்திகளையோ, அரசியல் தீர்வையோ அடைய முடியாது. ஆகவே,...கிழக்கு மாகாணசபையை கைப்பற்றி, இணக்க அரசியல் மூலம் கிழக்கு மாகாண ஆட்சி அதிகாரத்தை எமது மக்களுக்கான அரசியல் தீர்வு நோக்கி நகர்த்த விரும்பி அரசாங்கத்துடன் வெளிப்டையாகவே இணைந்து போட்டியிடும் தமிழ் பேசும் தரப்பினரை ஆதரிப்பதா?.... அல்லது, கிழக்கு மாகாண சபையை கைப்பற்றிவிட்டு இது வெறும் அரை குறை தீர்வு என்று கூறி, அபிவிருத்தியும் இன்றி அரசியல் தீர்வும் இன்றி தமிழ் பேசும் மக்களை நடுத்தெருவில் மறுபடியும் கைவிடப்போகும் தமிழ் தேசிய கூட்டமைப்பை ஆதரிப்பதா?... இதை கிழக்கு மாகாண தமிழ் பேசும் மக்களே தீர்மானிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்திருக்கும் ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கிடைப்பதை பெற்றுக்கொண்டு மேலும் பெறுவதற்கான மதிநுட்ப சாணக்கிய தந்திர அடிப்படையிலான இணக்க அரசியல் வழிமுறையே தமிழ் பேசும் மக்களை சுதந்திர பிரiஐகளாக எமது மண்ணில் வாழ வழிகுக்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். தகவல் தொடர்பு செயலாளர் ஈழ மக்கள் ஐனநாயக கட்சி.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’