வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 4 செப்டம்பர், 2012

விளையாட்டு வீரர்களை திருப்பி அனுப்புவது முறையல்ல: கருணாநிதி



மிழகத்துக்கு விளையாட வந்த இலங்கை கால்பந்தாட்ட அணியினரை திருப்பி அனுப்பியமை சரியான முடிவல்ல என்று தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான கருணாநிதி கூறியுள்ளார்.
திராவிட முன்னேற்ற கழக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று ஊடகவியலாளரிடம் கருணாநிதி பேசும்போதே மேற்படி கூறியுள்ளார். டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களும் விரைவில் ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பி வைக்கப்படும். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அதனைக் கொண்டு செல்வார். இதேவேளை, இலங்கை ராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கக்கூடாது என்பது எமது விருப்பம். எனவே அவர்களை திருப்பி அனுப்ப வேண்டும் என்பதுதான் திமுகவின் கோரிக்கையும். இதற்காக நிறையவே வாதாடி வருகிறோம். ஆனால், இலங்கை விளையாட்டு வீரர்கள் இங்கு வந்து விளையாடுவதும், இந்திய வீரர்கள் அங்கு சென்று விளையாடுவதும் வழக்கமான ஒன்று. எனவே, விளையாட்டு வீரர்களை திருப்பி அனுப்புவது சரியான முடிவல்ல என்று கருணாநிதி மேலும் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’