ஈழத்தில் மிக விரைவில் பெரிய விடுதலைப் போராட்டம் வெடிக்கும் என கவிஞர் காசியானந்தன் தெரிவித்துள்ளதாக இந்திய இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நெல்லை மாவட்டத்தில் அவர் ஆற்றிய உரையின்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் ஈழம் என்பது தமிழர்களின் தாயகம். ஈழப் போர் தொடங்கியபோது சென்னை இலங்கை தூதரகம் முன்பு ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதமிருந்தவர்களை ஆதரித்துப் பேசினார் மூதறிஞர் ராஜாஜி. அதன் பின் நடந்த இரண்டு ஈழப் போராட்டத்திலும் நாம் பதினைந்தாயிரம் ஏக்கர் பரப்பு நிலத்தை சிங்களவரிடம் இழந்தோம். ஆனால் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஆயுதமேந்திய காலங்களில் நாம் கையளவு நிலத்தைக் கூட பறிகொடுக்கவில்லை. முள்ளி வாய்க்கால் கொடுமையைப் பற்றி இந்திய அரசு சொல்லத்தயங்குகிறது. ஐம்பதாயிரம் வீடுகள் தமிழர்களுக்கு கட்டித்தரப்பட்டதாக அங்கே உள்ளவர்கள் சொல்கிறார்கள். ஆனால் அங்கே போய் வந்தவர்களோ 500 வீடுகள் தான் கட்டப்பட்டுள்ளன என்கின்றனர். தாய் தமிழச்சிகள் சொல்ல முடியாத பாலியல் கொடுமைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். ஈழத்தில் மிக விரைவில் பெரிய விடுதலைப் போர் வெடிக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’