திமுக தலைவர் கருணாநிதி இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- இலங்கை அகதிகள் எல்லாம் முகாம்களிலிருந்து இந்த அரசு எதுவும் உதவி செய்யவில்லை என்று கூறி வெளியேறிக் கொண்டிருக்கிறார்களே? பதில்:- இதற்கு தமிழக அரசு தான் பதில் கூறவேண்டும். கேள்வி:- தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினால் தாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், தமிழக அரசே ஒரு மீனவர் மீது துப்பாக்கி 2 சூடு நடத்தி கொன்றிருக்கிறதே? உங்கள் அறிக்கையிலே அதற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறீர்கள். இருந்தாலும் அதைப்பற்றி உங்கள் கருத்து? பதில்:- கூடங்குளத்தில் துப்பாக்கி பிரயோகம் வரை நடந்து முடிந்திருக்கிறது. காவல் துறையினரின் அத்துமீறலும் நடந்திருக்கிறது. அமைதியான முறையில் உண்ணா நோன்பு இருந்தவர்களிடத்தில் - சாத்வீகமான முறையில் இருந்தவர்களிடத்தில் - அவர்களை அடக்குவதற்காக அடக்குமுறைகளை ஏவி இப்படி காவல் துறை நடந்து கொண்டுள்ளது. அதற்கும் இந்த தமிழக அரசு தான் பொறுப்பாகும். கேள்வி:- கிரிக்கெட் விளையாடுவதற்காக இலங்கைக்குச் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். நீங்களும் கிரிக்கெட் ரசிகர் என்ற முறையில் என்ன சொல்கிறீர்கள்? பதில்:- ரசிகர் என்பதற்காக அல்ல; பொதுவாக விளையாட்டுகள் உலகத்தில் பல நாடுகளில் நடைபெறுவதை ஆதரிப்பவன் நான். இவ்வாறு கருணாநிதி கூறினார். -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’