வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 7 செப்டம்பர், 2012

தென்னாபிரிக்க அரசுடன் இணைந்து கைத்தொழிற்துறைகளை மேம்படுத்துவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆராய்வு!



பா ரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கீழான நிறுவனங்களின் கைத்தொழிற்துறைகளை தென்னாபிரிக்க அரசுடன் இணைந்து மேம்படுத்துவது தொடர்பிலான கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

கொழும்பு மருதாiனையில் அமைந்துள்ள அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்றையதினம் (6) மேற்படி கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கீழான நிறுவனங்களின் செயற்றிட்டங்களை மகிந்த சிந்தனைக்கு அமைவாக மென்மேலும் மேம்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

அதன்பிரகாரம் கைத்தொழில், சிறுதொழில், சிறுகைத்தொழில்துறைகளுடன் கைத்தொழில் பேட்டைகளை அபிவிருத்தி செய்வது, பனை, கித்துள் மற்றும் மீன்வலை சார்ந்த உற்பத்திகளை மேம்படுத்துவது தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இதன்மூலம் இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவை மேம்படுத்தி அபிவிருத்தி செய்வதுடன், குறிப்பிட்ட செயற்றிட்டங்களை எதிர்காலத்தில் மென்மேலும் நவீன தொழில்நுட்பத்துடன் வளர்த்தெடுப்பது போன்ற விடயங்களிலும், கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கீழான நிறுவனங்களினது உற்பத்திகளை தென்னாபிரிக்க நாட்டின் உற்பத்திகளுக்கு இணையாக உற்பத்தி செய்வதற்கு தமது முழுமையான பங்களிப்பு வழங்கப்படுமென தென்னாபிரிக்க அரசுப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.

தென்னாபிரிக்காவின் வியாபார அபிவிருத்தி கூட்டமைப்பின் பங்கேற்றலுடன் நடைபெற்ற இன்றைய கலந்துரையாடலின் போது அந்த நாட்டின் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் தலைமையிலான குழுவில் இலங்கைக்கான தென்னாபிரிக்க தூதுவர் மற்றும் ஏனைய வியாபார அரசதுறைசார்ந்த பிரமுகர்கள், வெளிநாட்டு அமைச்சின் பிரதிநிதிகள், வர்த்தகசம்மேளனப் பிரதிநிதிகள், கைத்தொழிற் பேட்டை சம்மேளனப் பிரதிநிதிகள் ஆகியோருடன் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி, அமைச்சரின் ஆலோசகர் ஜெகராஜசிங்கம் உள்ளிட்ட துறைசார்ந்த பலரும் கலந்து கொண்டனர்.







0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’