வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 27 செப்டம்பர், 2012

நில அளவை கள உதவியாளர்கள் நியமனம்



யாழ் மாவட்ட நில அளவை கள உதவியாளர்களுக்கான நியமனப்பத்திரங்களை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வழங்கி வைத்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சின் செயலகத்திற்கு வருகை தந்த குறிப்பிட்ட உதவியாளர்களுக்கு இந் நியமனங்கள் இன்றையதினம் (26) வழங்கப்பட்டுள்ளன.

யாழ் மாவட்டத்தில் நில அளவைத் திணைக்களத்தில் நில அளவை கள உதவியாளர்களுக்கு வெற்றிடங்கள் காணப்பட்ட நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் வேண்டுகோளுக்கமைய புதிய ஆட்சேர்ப்பு இடம்பெற்றது.

இதனடிப்படையில் இன்றையதினம் 10 பேருக்கான நியமனப்பத்திரங்களை அமைச்சர், ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின் (உதயன்), யாழ் மாவட்ட ஈ.பி.டி.பி அமைப்பாளர் க.கமலேந்திரன் (கமல்), யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோர் வழங்கி வைத்தனர்.

நியமனப்பத்திரங்களை வழங்கி வைத்த அமைச்சர் அவர்கள் நியமனதாரர்களுக்கு தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

இதனிடையே யாழ் செயலகத்திற்கு வருகை தந்த மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த மக்கள் குடிநீர், மின்சாரம், போக்குவரத்து, வாழ்வாதாரம், வடிகால்களின் புனரமைப்பு வேலைவாய்ப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாகவும் அமைச்சர் அவர்களுடன் கலந்துரையாடினர்.







-->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’