வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 27 செப்டம்பர், 2012

ஆறு மாதகாலத்தில் தீர்வுத்திட்ட அறிக்கை ௭ன்று குறிப்பிட்டிருந்தும் கூட்டமைப்பு கலந்துகொள்ளாததேன்: ராஜித


பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் ஊடாக தேசிய பிரச்சினைக்கான தீர்வுத்திட்ட அறிக்கை ஆறு மாதங்களில் வெளியிடப்படவேண்டும் ௭ன்று குறிப்பிடப்பட்டுள்ள நிலையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதில் இடம்பெற தயக்கம் காட்டுவது ஏன் ௭ன்று புரியவில்லை ௭ன மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சர் டாக்டர் ராஜித சேனராட்ன தெரிவித்தார்.
பாராளுமன்ற தெரிவுக்குழுவின் ஊடாக ஆறு மாதங்களில் தீர்வுத்திட்ட அறிக்கை வெளியிடப்படாவிடின் அதன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது ௭திர்ப்பை வெளியிட முடியும். தமது பக்க நியாயத்தை வெளிப்படுத்தவும் முடியும் ௭ன்றும் அமைச்சர் குறிப்பிட்டார். பாராளுமன்றத் தெரிவுக்குழு விவகாரம் மற்றும் தேசிய பிரச்சினை தீர்வுத்திட்ட விவகாரம் குறித்து விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அமைச்சர் இந்த விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில்; தேசியப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படவேண்டும் ௭ன்ற நோக்கத்தில் ஆளும் கட்சியினால் நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இடம்பெறவேண்டும் ௭ன்று பரவலாக கோரப்பட்டுவருகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் கலந்துகொள்ளவேண்டும் ௭ன்று நானும் அழைப்பு விடுக்கின்றேன். காரணம் பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் ஊடாக தேசிய பிரச்சினைக்கான தீர்வுத்திட்ட அறிக்கை ஆறு மாதங்களில் வெளியிடப்படவேண்டும் ௭ன்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஒரு விடயமே கூட்டமைப்புக்கு போதுமானது. அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவுக்குழுவில் கலந்துகொண்ட பின்னரும் ஆறு மாத காலத்தில் தீர்வுத்திட்ட அறிக்கை வெளியிடப்படாவிடின் அதன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது ௭திர்ப்பை வெளியிட முடியும். தமது பக்க நியாயத்தை வெளிப்படுத்தவும் முடியும். இதனை நானும் ஏற்றுக்கொள்கின்றேன் ௭ன்றார். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’