வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 28 செப்டம்பர், 2012

முள்ளிவாய்க்காலில் புதைத்த பொருட்களை தேடும் பணியில் மீள்குடியேற்ற பொதுமக்கள்



ன்னியில் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் முள்ளிவாய்கால் பகுதியில் புதைத்து வைத்துவிட்டுச் சென்ற பொருட்களை மீண்டும் தோண்டி எடுக்கும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
யுத்தம் நடைபெற்ற காலத்திற்கு முன்னர் மக்களால் சேமிக்கப்பட்ட சொத்துக்களில் அழிவடைந்து எஞ்சிய பொருட்களுடன் மக்கள் தங்கள் இடப்பெயர்வுப் பயணத்தை தொடர்ந்தனர். 2009ஆம் ஆண்டு யுத்தம் உக்கிரமடைந்ததைத் தொடர்ந்து பொது மக்கள் தங்கள் பொருட்களை புதைத்து விட்டு இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்து சேர்ந்தனர். தற்போது குறித்து பகுதியில் மக்கள் மீளக்குடியேறியுள்ளதால் அப்பகுதியில் புதைத்து வைக்கப்பட்ட பொருட்களை மீட்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, வவுனியா ஆகிய மாவட்டங்களில் இருந்தும் தங்களது பொருட்களை மீட்பதற்கு பொதுமக்கள் வருவதை காணக்கூடியதாக இருக்கின்றது. பெருமளவான பொருட்கள் சிதைவடைந்துள்ள போதிலும் அவற்றை மீட்பதில் மக்கள் குறியாக செயற்பட்டு வருகின்றனர். அத்துடன் குறித்து பகுதியில் மக்களால் மீட்கப்படும் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு பெருமளவான இரும்பு வியாபாரிகள் முள்ளிவாய்காலுக்கு படையெடுத்துள்ளனர். நாள் தோறும் 100க்கும் மேற்பட்ட வியாபாரிகள் இங்கு வந்து பொதுமக்களிடம் பொருட்களை கொள்வனவு செய்து செல்வதுடன் சில வியாபாரிகள் பொதுமக்களை தாங்களே அழைத்து வந்து அவர்கள் கொண்டு வரும் இரும்பு பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’