வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 7 செப்டம்பர், 2012

பிறநாடுகளில் அகதி அந்தஸ்து கோருமளவுக்கு நாட்டில் பிரச்சினை இல்லை: பிரபா எம்.பி.



யுத்தம் முடிவடைந்து இனப் பிரச்சினைக்கான தீர்வை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் அகதி அந்தஸ்து கோரும் அளவுக்கு நமது நாட்டில் தற்போது பிரச்சினைகள் இல்லை. சட்ட விரோதமாக அவுஸ்திரேலியா செல்லும் தமிழர்களின் தொகை அதிகரித்துள்ளது. இவ்வாறான சட்ட விரோதமான செயல்பாடுகளினால் உயிரிழக்கும் அபாயமும் பெருகி வருகிறது. ஆகையால் இப்படியான சட்டவிரோத பயணத்தை தவிர்க்குமாறு ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது... யுத்தம் முடிவடைந்து இனப் பிரச்சினைக்கான தீர்வை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் அகதி அந்தஸ்து கோரும் அளவுக்கு நமது நாட்டில் தற்போது பிரச்சினைகள் இல்லை. ஏற்கனவே வட, கிழக்கிலிருந்து பல இலட்சக்கணக்கான மக்கள் கடந்த கால யுத்தத்தை முன்னிறுத்தி வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து விட்டனர். அதில் பாதிப்படைந்தவர்கள் பலர் இருந்தும் ஏனையோர் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பிற நாடுகளில் பிரஜா உரிமையை பெற்றுள்ளனர். பல இலட்சக் கணக்கான தமிழர்கள் வட மாகாணத்திலிருந்து வெளியேறியதனாலேயே இன்று வன்னி, யாழ். மாவட்டங்களில் சனத்தொகை மதிப்பீட்டின்படி நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறைக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமான செல்பவர்கள் இன்று கைது செய்யப்படுகிறார்கள். அது மட்டுமின்றி இடையில் படகுகள் கவிழ்ந்து உயிரிழக்க நேரிடுகிறது. இப்படியான உயிரிழப்புகள் சிலவற்றையே நாம் தினசரி கேள்விப்படக்கூடியதாக இருக்கின்றது. பல படகு விபத்துக்கள் வெளியே வெளிச்சத்துக்கு வருவதும் இல்லை. இப்படியான நிலையில் போலி முகவர்களை நம்பி அவுஸ்திரேலியா செல்ல முற்படுவது ஆபத்தானதாகும். வடமாகாண தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது சம்பந்தமாக தமது மாவட்ட மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிடும் திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த வேட்பாளர் ஒருவர் கூட இது சம்பந்தமாக சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மக்களுக்கு சரியான பாதையை காட்ட வேண்டிய அரசியல் தலைவர்களே இன்று தேவைப்படுகின்றனர். சட்ட ரீதியாக அகதி அந்தஸ்து கோரும் 20 ஆயிரம் பேரை வருடந்தோறும் ஏற்றுக்கொள்ளப் போவதாக அவுஸ்திரேலியா அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. ஆகவே சட்டரீதியாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல சந்தர்ப்பம் இருக்கும் பொழுது ஆபத்தான படகுவழி பயணத்தை மேற்கொள்ள வேண்டாம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’