பொ லீஸ் மற்றும் பொதுமக்களுக்கிடையே பரஸ்பரம் காணப்படுகின்ற நல்லுறவே சிவில் நிர்வாகத்தை பலப்படுத்தும் என ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இன்றையதினம்
(01) கிளிநொச்சியில் இடம்பெற்ற 146 ஆவது பொலீஸ்தின நிகழ்வில் பிரதம
விருந்தினராக கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு
தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், சிவில் நிர்வாகத்தை கட்டிகாக்கும் மிகப்பெரிய பொறுப்பை கொண்டிருக்கும் பொலீஸாரின் 146 ஆவது ஆண்டு தின நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டமையிட்டு பெருமையடைகிறேன். நீண்ட யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு சிவில் நிர்வாக செயற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வரும் இந்த சூழலில் கிளிநொச்சியில் இந்த நிகழ்வு முக்கியமானதாகும். ஜனநாயகத்தின் தூண்களாக நீதித்துறையும் பொலீஸ் திணைக்களமும், அரச நிர்வாக கட்டமைப்புகளுமே காணப்படுகின்றன எனவே பொலீஸ் பொதுமக்கள் நல்லுறவு பலப்படுத்தப்படும் போதே மக்களுக்கான சிவில் நிர்வாக செயற்பாடுகளை பயனுள்ளதாக மாற்றமுடியும். மக்களின் நலன்களுக்காக உருவாக்கப்பட்டதே பொலீஸ் துறையாகும் எனவே மக்களுக்கான சட்டத்தினையும் ஒழுங்கையும் பாதுகாக்கும் மிகப்பெறும் பொறுப்பு பொலீஸாரிடமே உண்டு. இந்த நாட்டில் நீதித்துறை ஒரு தனித்துவமான துறையாக விளங்குகிறது. அதன் பல்வேறு தீர்ப்புக்கள் நீதித்துறை நடுநிலைமையாக உள்ளது என்பதனை நிரூபித்திருக்கிறது. அவ்வாறான நீதித்துறைக்கு பக்கபலமாக இருப்பது பொலீஸாரே எனத்தெரிவித்த அவர், மேலும் தெரிவிக்கையில் இன்று சிவில் நிர்வாக செயற்பாடுகள் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகிறது. சிவில் நிர்வாகத்தின் அலகுகளான அரச இயந்திரங்கள் சீராக இயங்கமுடியாத நிலை காணப்படுகிறது எனவும் சிவில் நிர்வாக செயற்பாடுகளில் இராணுவத்தின் தலையீடுகள் காணப்படுவதாகவும் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் அதனை மாற்றி அமைக்க வேண்டுமாயின் சிவில் பொலீஸ் மற்றும் அரச நிர்வாக அலகுகளின் செயற்பாடுகள் சீராக இடம்பெறவேண்டும். இங்கு சிவில் நிர்வாகத்திற்குரிய அரச நிர்வாக அலகுகள் பொலீஸ{ம் அதனை வழிநடத்துகின்ற அரசியல் தலைமைத்துவத்தின் பொறுப்பிலேயே இருக்கவேண்டுமே தவிர வேறு யாரிடமும் இருக்கமுடியாது யுத்தகாலத்திலிருந்து இன்று வரை சிவில் நிர்வாக செயற்பாடுகள் அதனை வழிநடத்துகின்ற அரச அதிகாரிகளிடமே இருக்கவேண்டும் என்பதனை நோக்கி கொண்டுசெல்லப்படுகிறது எனவே எல்லா வகையான குற்றச்சாட்டுகளிலிருந்து விடுபட்டு ஒரு தனித்துவமான சிவில் நிர்வாக செயற்பாடுகளை நோக்கியே நாம் சென்றுகொண்டிருக்கின்றோம். எனவே பொலீஸார் பொதுமக்களின் மனங்களை வென்றெடுக்கவேண்டும் பொலீஸாருககும் பொது மக்களுக்குமிடையேயான இடைவெளி இருக்க கூடாது. பொலீஸாருடன் மக்களும் மக்களுடன் பொலீஸாரும் நெருங்கிய நல்லுறவை வளர்த்துக்கொள்ளவேண்டும் அதுதான் பயனுள்ள சிவில் நிர்வாகத்திற்கு வலுவானதாக அமையும். தமிழ் மக்கள் பெருமளவு வாழ்கின்ற பிரதேசங்களிலுள்ள பொலீஸ் நிலையங்களில் தமிழ் மொழி தெரிந்த பொலீஸாரை நியமித்து வருகின்றோம் மக்கள் பொலீஸாரை கண்டு பயப்படக்கூடாது. பொதுமக்கள் அரச திணைகளங்களுக்கு எவ்வாறு நாளாந்தம் தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதற்காக சென்று வருகின்றார்களோ அதேபோன்றே பொலீஸ் நிலையத்திற்கும் சென்று வருகின்ற சூழலை உருவாக்க வேண்டும் பொலீஸ் பொதுமக்களுக்கிடையே அந்தளவுக்கு நட்பு ஏற்படவேண்டும் அப்போதுதான் பொலீஸ் சேவை வெற்றிப்பபெற்ற சேவையாக மாற்றம் பெறும் எனக்குறிப்பிட்ட அவர், கிளிநொச்சியில் தங்களுடைய உன்னதமான சேவைகளை செய்து வருகின்ற பொலீஸ் உயரதிகாரிகள் முதல் அனைத்து பொலீஸாருக்கும் தனது நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டார். இந்நிகழ்வில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட பிரதிபொலீஸ்மா அதிபர் நீல்தளுவத்த, கிளிநொச்சி பிரதி பொலீஸ் அத்தியட்சர் எட்வின் மகேந்திரா மற்றும் பொலீஸ் அதிகாரிகளான செல்வம் சேனாதீர கிளிநொச்சி பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி வீரசிங்க மதகுருமார்கள் இரானுவ அதிகாரிகள் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். |
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’