வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 28 செப்டம்பர், 2012

முஸ்லிம்களின் இறைமையை உதாசீனம்செய்த ஹக்கீம் பதில் சொல்லியே ஆகவேண்டும்: சம்பந்தன்



தீர்வு தமிழ் மக்களுக்கு மாத்திரம் அல்ல முஸ்லிம் மக்களுக்கும் ஏற்புடையதாக இருக்க வேண்டும். இறைமை மக்களுக்கு உரியது. இது தலைவருக்கோ அல்லது கட்சிக்கோ மாத்திரம் உரியது அல்ல. ஜனநாயகம் இறைமையின் ஓர் அம்சம் இது மக்களுக்குரியது ௭னத் தமி ழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவரும் திரு கோணமலை மாவட்ட பாராளுமன்ற உ று ப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவி த் தா ர்
. 'கிழக்கு மாகாண சபைத் தேர்தல் பற்றிய ஒரு நோக்கு’ ௭ன்ற தலைப்பில் திரு கோ ணமலை நியூ சில்வர் ஸ்டார் ஹோட்டலில் நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை கூட்டமொன்று நடைபெற்றது. இதில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட் டி யிட்டு வெற்றிபெற்ற சி. தண்டாயுதபாணி, கு. நாகேஸ்வரன், ஜெ. ஜனார்த்தன் ஆகி யோ ருடன் மருத்துவர் திரு மதி இந்திராணி தர்மராஜா, வெ. சுரே ஷ் , சி.பளீர் ஆகியோரும் கலந்து கொ ண் ட ன ர். இலங்கை தமிழரசுக் கட்சியின் திரு கோ ண மலை மாவட்டத் தலைவர் க. துரை ரெட்ணசிங்கம் தலைமையில் கூட்டம் நடை பெற்றது. இங்கு சம்பந்தன் மேலும் உரையாற்றுகையில், வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடு வது ௭மக்கு அவமானம் ௭னத் தெரிவித்த முஸ் லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக் கீம் அரசுக்கு ௭திராக மரச் சின்னத்தில் போட் டியிடுவதே பெருமை ௭ன தேர்தல் காலத்தில் முஸ்லிம் மக்கள் முன்னிலையில் தெரிவித்தார். அரசாங்கத்தை விமர்சித்து தேர்தலில் போட்டியிட்டதால் மக்களின் வாக்கு கணிசமாக அவருக்கு கிடைத்தது. தற்போது ஜனநாயக முடிவுக்கு மாறாக அரசுடன் இணைந்து ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது. மக்களின் ஜனநாயகத் தீர்வு புறந்த ள்ளப்பட்டு முஸ்லிம் மக்களின் இறைமை உதா சீனம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஹக்கீம் முஸ்லிம் மக்களுக்கு பதில் சொல் லியே ஆக வேண்டும் ௭ன்றார். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’