வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 28 செப்டம்பர், 2012

ஆஸியில் தஞ்சமடைந்த இலங்கையரில் மீண்டும் நாடு திரும்ப விரும்புவோர் தொகை அதிகரிப்பு: திஸர சமரசிங்க



வுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்துள்ள இலங்கையர்களில், மீண்டும் நாடு திரும்ப விண்ணப்பித்துள்ளோர் தொகை மேலும் அதிகரித்துள்ளதாக அவுஸ்திரேலியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் திஸர சமரசிங்க அந்நாட்டு பத்திரிகையான நெஷனல் ரைம்ஸுக்கு தெரிவித்துள்ளார்.
கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 18 இலங்கையர்கள் கடந்த வாரம் நவுறுவுக்கு அனுப்பப்படுவதை விட இலங்கை திரும்புவதையே விரும்பினர். பசுபிக் தீவான நவுறுவுக்கு அனுப்பி விசாரிக்கும் முறையை அரசாங்கம் கொண்டுவந்த பின்னும், புகலிடக் கோரிக்கையாளர்களுடன் படகுகள் கிறிஸ்மஸ் தீவுக்கு அருகாமையில் வருவதாக சிட்டி மோர்னிங் ஹெரால்ட் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தவகையில், அண்மைக்காலங்களில் வந்த படகுகளில் ஆகவும் கூடுதலான 195 பயணிகளை ஏற்றிய படகொன்றுக்கு உதவி வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஓகஸ்ட் 13இன் பின், 3200க்கு மேற்பட்ட புகலிடம் கோருவோர் வந்துள்ளதாகவும் இவர்கள், நவுறு மற்றும் பப்புவா நியூகினி மனெஸ் தீவுகளில் உள்ள முகாம்களின் கொள்ளளவிலும் கூடுதலாக இருந்தனர் எனவும் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு முற்பகுதியில் 24 மணித்தியாலங்களுக்குள் மூன்று படகுகள் கொக்கொஸ் தீவு ஆள்புலத்தினுள் வழிமறிக்கப்பட்டுள்ளன. மனிதக் கடத்தலில் ஈடுபடுவோரின் தொழில் விரைவில் முடிவுக்கு வந்துவிடுமென அவுஸ்திரேலிய அரசாங்கம் கூறியுள்ளது. -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’