வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 28 செப்டம்பர், 2012

வீட்டுத்திட்ட பயனாளிகள் தெரிவின்போது முறைகேடுகளுக்கு இடமளிக்கப்போவதில்லை - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா


ந்திய வீட்டுத்திட்ட பயனாளிகள் தெரிவின்போது முறைகேடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லையென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் அலுவலகத்தில் இன்றையதினம் (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களுடன் தாம் 2010ம் ஆண்டு ஜுன் மாதம் புதுடில்லிக்கு சென்றிருந்த சமயம் மேற்கொண்ட கலந்துரையாடலின் பயனாகவே இந்திய அரசின் ஐம்பதாயிரம் வீட்டுத்திட்ட உதவி கிடைக்கப்பெற்றதாக அமைச்சர் அவர்கள சுட்டிக்காட்டினார்.

இதன் பிரகாரம் யாழ்ப்பாண மாவட்டத்துக்கு 8700 வீடுகளும் கிளிநொச்சி மாவட்டத்துக்கு 7100 வீடுகளும் மன்னார் மாவட்டத்துக்கு 7500 வீடுகளும் வவுனியா மாவட்டத்துக்கு 4200 வீடுகளும் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு 7500 வீடுகளும் என்ற அடிப்படையில் வழங்கப்படவுள்ளதாகவும் இவ்வீட்டுத்திட்டத்தின் கீழ் வடமாகாணத்தில் 35000 வீடுகளும் திருத்தத்திற்காக மாவட்டத்தில் தலா 1000 வீடுகள் வீதம் 5000 வீடுகளும் முன்னோடித் திட்டத்திற்காக 1000 வீடுகளுமாக மொத்தம் 41000 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் கிழக்கு மாகாணத்திற்கு 6000 வீடுகளும் மலையகத்திற்கு 3000 வீடுகளும் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஐந்து மாவட்டத்திற்கும்; சில தகுதிகளை அடிப்படையாகக் கொண்டு தலா 500 பயனாளிகள் வீதம் தெரிவு செய்யப்படும் அதேவேளை வீடுகளின் நிர்மாணத்திற்கான பணத்தை அந்தந்த பயனாளிகளிடம் வழங்குவதன் மூலம் அவர்கள் தமது விருப்பத்திற்கிணங்க குறிப்பிட்ட தொகைக்குள் கட்ட முடியும் எனவும் பயனாளிகள் தெரிவுகள் முன்னுரிமை அடிப்படையிலும் வெளிப்படைத் தன்மையுடனும் இடம்பெறும் எனவும் இதன்போது முறைகேடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டமாது என்றும் அமைச்சர் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

யாழ் மாவட்டத்தில் தெல்லிப்பளை சாவகச்சேரி மற்றும் மருதங்கேணி ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளைச் சேர்ந்த 500 பயனாளிகள் முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களது பெயர் விபரங்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படவுள்ளதாகவும் இதனிடையே இந்திய அரசின் வீட்டுத்திட்டம் முடிவுக்கு வரும் பட்சத்தில் புலம் பெயர் மக்களினது உதவியுடன் எமது மக்களுக்கான வீடுகளை கட்டுவதற்கு புலம்பெயர் சமூகம் முழுமையான பங்களிப்பு வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்ட அமைச்சர் அவர்கள் அரச உத்தியோகத்தர்களுக்கான வீட்டுத்திட்டம் தொடர்பிலும் உரிய கவனம் செலுத்தப்படும் எனவும் உறுதிபடத்தெரிவித்தார்.

இதனிடையே ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கும் அமைச்சர் அவர்கள் இதன்போது பதிலளித்தார். இதில் யாழ் மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் உடனிருந்தார்.





-->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’