வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 8 செப்டம்பர், 2012

149 போலி ஆயிரம் ரூபா நாணயத்தாள்களுடன் நால்வர் கைது



போலி ஆயிரம் ரூபா நாணயத்தாள்களை அச்சடித்த நால்வரை இன்று கைது செய்துள்ளதாக நீர்கொழும்பு பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி நிஷாந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.
கிம்புலாபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த நால்வரே கைது செய்யப்பட்டுள்ளவர்களாவர். இவர்களுடன் 149 போலி ஆயிரம் ரூபா நோட்டுக்களையும் போலி நோட்டுக்களை அச்சடிக்கப் பயன்படுத்தப்பட்ட மடிகணினி, ஸ்கேனர், பிரின்டர் ஆகியவற்றையும் பொலிஸார் கைபற்றியுள்ளனர். கிம்புலாபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நபரிடமிருந்து போலி நோட்டுக்களை அச்சடிக்கத் தேவையான உபகரணங்களை வாங்குவதற்கு ஆரம்பத்தில் இரண்டு இலட்சம் ரூபா பணத்தைப்பெற்று போலி நோட்டுக்கள் அச்சடிக்கும் சட்டவிரோத செயல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர். போலி அயிரம் ரூபா நாணயத்தாள்களை, பட்டாசு வியாபாரிகள் மூலம் கிளிநொச்சி பிரதேசத்தில் மாற்ற சந்தேக நபர்கள் எடுத்த முயற்சி தோல்வி அடைந்துள்ளதாகவும் ஏனைய இடங்களில் நாணயத்தாள்கள் சில மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். நீர்கொழும்பு பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி சந்தன கலப்பதியின் ஆலோசனையின் பேரில் குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி நிஷாந்த பெர்னாண்டோ தலைமையிலான குழுவினர் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர் செய்ய பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’