வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 8 செப்டம்பர், 2012

செட்டியார்தெரு நகை வியாபாரிகளுக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல்



கை வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் செட்டியார் தெருவைச் சேர்ந்த வர்த்தகர்கள் கடந்த ஐந்து மாதகாலமாக அநாமதேய தொலைபேசி அழைப்புகள் ஊடாக மிரட்டப்பட்டும் அச்சுறுத்தப்பட்டும் பணம் பறிக்கப்பட்டும் வருகின்ற சம்பவம் நீடித்து வருகின்றது.
இது தொடர்பில் அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஆதாரங்களுடன் முறைப்பாடு செய்திருப்பதாக சங்கத்தின் உயர்பீட அதிகாரியொருவர் தெரிவித்தார். அநாமதேய அழைப்புக்களை மேற்கொள்கின்ற நபர்கள் தம்மை பொலிஸ் உயர் அதிகாரிகள் என அடையாளம் காட்டிக்கொண்டே இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்து பணம் பறிப்பதாகவும் இதனால் செட்டியார் தெருவைச் சேர்ந்த நகை வியாபாரிகள் அச்சத்துக்கு மத்தியில் செய்வதறியாது இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதேவேளை தமது அழைப்புகள் தொடர்பில் தகவல் எதுவும் வெளியிடக்கூடாது என தாம் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் அச்சுறுத்தப்பட்டு வருவதாகவும் பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’