யா ழ்.மாவட்டத்தில் வாழ்வெழுச்சித் திட்டத்தினூடாக தெரிவு செய்யப்பட்ட சிறுதொழில் முயற்சியாளர்களுக்கு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் ஊடாக இலகுகடன்களை பெற்றுக் கொள்வது தொடர்பிலான செயற்திட்டம் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் நடைபெற்றுள்ளது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் (13) இடம்பெற்ற இச் செயற்திட்டத்தில் மாவட்டத்தில் நடைபெற்ற வாழ்வெழுச்சிக் கண்காட்சியி;ன் போது கைத்தொழில் அபிவிருத்தி சபை, பனை அபிவிருத்தி சபை, தேசிய வடிவமைப்பு நிலையம், தேசிய அருங்கலைகள் பேரவை உள்ளிட்ட இருபதிற்கும் மேற்பட்ட நிறுவனங்களால் வழங்கப்பட்ட 400 ற்கும் மேற்பட்ட சிறுதொழில் முயற்சிகளில் தமது பதிவுகளை மேற்கொண்டிருந்தோரில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் மற்றும் கைத்தொழிலாளர்களின் தொழிற்துறைகளை மேம்படுத்தும் பொருட்டு, வங்கிகள் ஊடாக இலகுகடன்களை வழங்குவது தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.
இதில் இருபதிற்கும் மேற்பட்ட வங்கிகள் கலந்து கொண்டதுடன், 80 வீதமான சிபார்சுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், பிணைகளை அடிப்படையாகக் கொண்டில்லாமல் கருத்திட்டங்களின் பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு இக்கடன் உதவிகள் வங்கிகள் மூலமாக வழங்கப்படவுள்ளன.
இதன்பிரகாரம் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சினால் மாவட்டங்கள் தோறும் முன்னெடுக்கப்பட்டு வரும் வாழ்வெழுச்சிக் கண்காட்சிகள் நடாத்தப்பட்டு வரும் நிலையில், யாழ்ப்பாணத்தில் நடாத்தப்பட்ட வாழ்வெழுச்சிக் கண்காட்சியின் போது தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு அரச மற்றும் தனியார் வங்கிகள் ஊடாக இலகு கடன்களைப் பெற்றுக் கொடுப்பதுடன், அதனூடாக துறைசார்ந்த தொழிற்துறைகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
இதன்மூலம் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கீழ் பல நூற்றுக்கணக்கான பயனாளிகள் மற்றும் சிறுதொழில் முயற்சியாளர்கள் பொருளாதாரத்தில் மேம்பாடு அடைய வாய்ப்பு கிட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி; வங்கிகள் ஊடான இலகுகடன் திட்டம் தொடர்பான விளக்கவுரையாற்றியதைத் தொடர்ந்து, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உரையாற்றுகையில் சிறுதொழில் முயற்சியாளர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது மட்டுமன்றி அவர்களது உற்பத்திகளை நவீனப்படுத்தி அவற்றுக்கான சிறந்த சந்தைவாய்ப்பினை ஏற்படுத்தும் வகையில் அவர்களுக்கு இலகுகடன்களை எமது அமைச்சின் மூலமாக ஏற்படுத்திக் கொடுப்பதே எமது முக்கிய நோக்கமெனவும், மகிந்த சிந்தனையின் எதிர்கால நோக்கில் இது முக்கிய செயற்திட்டமெனவும் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே வங்கிகளினது பதிவு நடவடிக்கைகள் தொடர்பில் அமைச்சர் அவர்கள் நேரில் சென்று ஆராய்ந்தறிந்து கொண்டார்.
இதில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் பணிப்பாளர் அஜித் ஏக்கநாயக்க, வாழ்வெழுச்சித் திட்டப் பணிப்பாளர் கமகே, வடமாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி ரமேஸ், வடமாகாண ஆளுநரின் செயலாளர் இளங்கோவன், மாவட்ட மேலதிக அரச அதிபர் திருமதி ரூபினி வரதலிங்கம் ஆகியோருடன் வங்கிகளின் துறைசார்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்;டனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’