வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

மதவழிபாட்டுச் சுதந்திரம் கேள்விக்குள்ளாவதைச் சுட்டிக்காட்டினால் நையாண்டி செய்யப்படுகின்றோம்: ஹக்கீம்



தவழிபாட்டுச் சுதந்திரம் கேள்விக்குள்ளாவதைச் சுட்டிக்காட்டினால் நையாண்டி செய்யப்படுகின்றோம் என ஸ்ரீ லங்கா முஸ்லிம்காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவ+ப் ஹக்கீம் தெரிவித்தார். கல்குடாத் தொகுதி ஓட்டமாவடிப் பிரதேச மாவடிச்சேனையில் கட்சியின் கிளையொன்றை வியாழக்கிழமை திறந்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இத்தேர்தலின் ஊடாக அரசியலில் அதிமுக்கிய திருப்பு முனையொன்றை சந்திக்கப்போகின்றது. பல கட்சிகள் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சின்னத்தில் போட்டியிட முன்வந்துள்ள நிலையில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது மரச்சின்னத்தில தனித்துப் போட்டியிடுவதற்கு தீர்;மானித்ததை பலரும் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பெரிதும் சிலாகித்துப் பேசுகின்றனர். கட்சிப் போராளிகள் மரச்சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று அடம்பிடித்தார்கள். அரசாங்கத்தில் மு.கா. இணைந்து செயற்பட்டால் தமக்கு இடமில்லாமல் போகும் என்ற காரணத்தினால் இடது சாரிக்கட்சிகள் தனித்துப் போட்டியிடப் போவதாக தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு ஒரு கிழமைக்கு முன்னரே கூறினார்கள். அரசாங்கத்தோடு மு.கா. சேர்ந்து கேட்டால் முஸ்லிம் காங்கிரஸ் வெற்றியடைந்து விடும் மு.கா. வை வெளியே போட்டால் தாம் வெற்றியடைந்து விடலாம் என்ற நப்பாசையுடனும் சிலர் இருந்தனர். மு.கா. அரசோடு இருந்தாலும் அரசக்கு வெளியில் இருந்தாலும் கிழக்கு மாகாணத்தில் ஆட்சியை தீர்மானிக்கின்ற கட்சி மு.காங்கிரஸ்தான் என்பதை எமது கட்சிப் போராளிகள் புரிந்து கொண்டிருந்தார்கள். அமைச்சர்களாக இருந்தால்தான் கட்சி நடத்தலாம் என்ற தேவை மு.காவுக்கு கிடையாது என்பதை அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களான பஸில் ராஜபக்ச, மைத்திரி பால சிரிசேன, சுசில் பிரேமஜயந்த, டலஸ் அழகப்பெரும போன்றவர்களுக்கு தெளிவாகக் குறிப்பிட்டேன். மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளராக ஏறாவ+ர் பிரதேசத்தை சேர்ந்த ஹாபிஸ் நஸீர் அஹமத்தை அடையாளப்படுத்தியுள்ளோம். மூன்று ஆசனம் அல்லது அதற்கு மேல் வெற்றி பெறுவது என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும். ஆனால் இந்த வெற்றி இலக்கை அடைவதற்கு முதன்மை வேட்பாளருக்கான ஆலோசனைகளையும், ஒத்துழைப்புகளையும் வழங்கத் தயாராகவுள்ளோம் என்பதை அவருக்கு தெளிவுபடுத்தியுள்ளோம். மாறிவரும் அரசியலுக்கு ஏற்ப நாங்களும் இயங்க வேண்டும். இன்று அரபுலக வசந்தம் மமதை பிடித்த ஆட்சியாளருக்கு எதிராக பாரிய மக்கள் எழுச்சிகளை ஏற்படுத்தி வருகின்றது. அதே மாதிரியான ஒரு எழுச்சியை கிழக்கு மண்ணில் மக்கள் செய்து காட்டி ஆட்சியாளர்களை உணரச் செய்வதற்கு மரச்சின்னத்தை இன்று நாம் உங்கள் முன் கொண்டு வந்து வைத்துள்ளோம். மட்டக்களப்பில் அரபுலக வசந்தத்திற்கு ஒத்த ஒரு போராட்டத்தை இந்த வேட்பாளர்கள் ஊடாக செய்து காட்ட வேண்டும் என்ற பொறுப்பை ஒப்படைத்துள்ளோம். குக்கிராமங்களில் கூட ஒரு வீட்டுக்குள் அருகிலுள்ளவர்கள் ஒன்றுகூடி கூட்டாக தொழுகை நடத்தக் கூட அஞ்சுகின்ற காலமிது. மதவெறியர்கள் அதற்கு முட்டுக்கட்டை போடுகின்றார்கள். இத்தகைய கேவலமான இழிசெயலை நாட்டில் பாதுகாப்பிற்குப் பொறுப்பான ஆட்சித் தலைவரும், பாதுகாப்புச் செயலாளரும் வெறுமனே பார்த்துக்கொண்டிருப்பதால் மக்களின் மனவேதனை மேலும் அதிகரிக்கின்றது. இவ்வாறான மதவழிபாட்டுச் சுதந்திரத்தை கேள்விக்குள்ளாக்கும் கேவலமான செயல்களைச் சுட்டிக்காட்டப்போனால் நாங்கள் நையாண்டி செய்யப்படுகின்றோம். இவ்வாறான காரியங்களைக் கண்டிப்பதற்கும், எமது உரிமைக் குரலை உயர்த்துவதற்கும் எமது பேரம் பேசும் சக்தியை அதிகரித்து அரசியல் பலத்தை மேலும் சிறப்பாக வெளிக்காட்டுவதற்கு குறிப்பாக கிழக்கு மண்ணில் எமது வெற்றியை உறுதிப்படுத்த வேண்டும் என்றார். முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் பிரதியமைச்சர் முதன்மை வேட்பாளர் ஹாபிஸ் நஸீர் அஹமத், ஏனைய வேட்பாளரான இஸ்மாயில் ஹாஜியார், ஜவாஹிர் சாலி, சட்டத்தரணி ராசிக் ஆகியோரும் உரையாற்றினர். இந்நிகழ்வில் கட்சியின் தவிசாளர் பிரதியமைச்சர் பஸீர் சேகுதாவ+த், பிரதித் தலைவர் ஹாபிஸ் நஸீர் அஹம்மட், கிழக்கு மாகாண சபை வேட்பாளர்களான இஸ்மாயில் ஹாஜியார்,ஜவாஹிர் சாலி, சட்டத்தரணி ராஸிக், கல்குடாத் தொகுதி அமைப்பாளர் ஹனிபா ஹாஜியார் ஆகியோர் உட்பட கட்சி முக்கியஸ்தர்களும், பொது மக்களும் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’