வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 11 ஆகஸ்ட், 2012

அண்ணா அறிவாலயத்திலாவது மாநாடு நடக்கும்' - கருணாநிதி



திமுக நாளை சென்னை நடத்தவிருக்கும் தமிழீழ ஆதரவாளர் அமைப்பான டெசோவின் மாநாடு பல்வேறு சிக்கல்களை தொடர்ந்து எதிர்நோக்குகிறது. நேற்று டெசோ மாநாட்டிற்கு அனுமதி மறுக்கப்படவேண்டும் என்ற பொது நலவழக்கின் மீது உத்திரவு எதுவும் பிறப்பிக்காமல் சென்னை உயர்நீதிமன்றம்,
மாநாடு நடத்த அனுமதி கோரும் டெசோ மனுவின் மீது முடிவெடுக்கும் பொறுப்பினை மாநகர காவல்துறையிடமே விட்டுவிட்டது. இரவு மாநாடு நடத்த அனுமதி இல்லை என்ற செய்தி டெசோ அமைப்பாளர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து திமுக மீண்டும் உயர்நீதி மன்றத்தை அணுகியது. இன்று மதியம் அந்த வழக்கு நீதிபதி பால் வசந்தகுமார் முன் வந்தது. சட்டம் ஒழுங்குப் பிரச்சினையோ போக்குவரத்து நெரிசலோ ஏற்படும் வாய்ப்பில்லை என திமுக தரப்பில் வாதாடப்பட்டது. ஆனால் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் தீவிரவாதிகள் ஊடுருவி, அயோத்தியில் பாபர் மசூதி தகர்க்கப்பட்டதன் பின்னணியில் நிகழ்ந்ததைப் போன்று பெரும் களேபரம் ஏற்படும் வாய்ப்பிருப்பதாகவும் எனவே மாநாடு நடத்தப்படக்கூடாது எனவும் கூறினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வசந்தகுமார் ஏற்கனவே மாநாடு தொடர்பான பொதுநலவழக்கை விசாரித்து வரும் நீதிபதிகளே இவ்வழக்கையும் விசாரிக்கட்டும் என்று சொல்லி அமர்வை முடித்துக்கொண்டார். மாநாடு நடத்த அனுமதி கோரும் மனு பொதுநலவழக்கை விசாரிக்கும் டிவிஷன் பெஞ்சால் இன்றே விசாரிக்கப்படுமா அல்லது தலைமை நீதிபதி புதிய பெஞ்ச் அமைப்பாரா
மாநாடு நடத்த அனுமதி கோரும் மனு பொதுநலவழக்கை விசாரிக்கும் டிவிஷன் பெஞ்சால் இன்றே விசாரிக்கப்படுமா அல்லது தலைமை நீதிபதி புதிய பெஞ்ச் அமைப்பாரா என்பது தெரியவில்லை.
'அண்ணா அறிவாலயத்திலாவது மாநாடு நடக்கும்'
ராயப்பேட்டை வொய்.எம்.சி.ஏ அரங்கில் மாநாட்டு ஏற்பாடுகள் தீவிரமாகத் தொடர்கின்றன. காலையில் திமுக தலைவர் கருணாநிதி மாநாட்டை நடத்துவதற்கு சட்டப்படி உள்ள வழிமுறைகளை எல்லாம் கடைப்பிடிக்க இறுதிவரை முயற்சி செய்வோம் எனக்கூறி காலையில் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்.
பின்னர் மாலையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், திமுக தலைவர் கருணாநிதி எப்படியும் நாளை சென்னையில் டெசோ மாநாடு நடந்தே தீரும். திட்டமிட்டபடி ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் மாநாட்டை நடத்த நீதிமன்றம் மூலம் அனுமதி பெறமுடியவில்லையென்றால், நிகழ்ச்சிகள் திமுகவின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்திலேயே நடைபெறும் என தெரிவித்திருக்கிறார்.
திமுக வேண்டுகோளின்படி இந்திய அரசு ஆதரித்து, ஐக்கிய நாடுகள் மன்றம் ஜெனீவாவில் நிறைவேற்றிய தீர்மானத்தை மேலும் வலியுறுத்துவதுதான் இந்த மாநாட்டின் உண்மையான நோக்கம், ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமை மட்டுமே இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும் என்று வெளிப்படையாக அறிவித்திருந்தும், மாநாட்டினை எப்படியும் நடக்கவிடாமல் தடுக்க சில முயற்சிகள் நடைபெறுகிறது என்றும், விடுதலைப்புலிகளும் வேறுசில தீவிரவாத இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் கலந்து கொள்ளக்கூடும் என்று தகவல் வந்திருப்பதாக காவல்துறை ஆணையர் கூறியிருப்பது முற்றிலும் உண்மைக்கு மாறானது என்றும் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகிவரும் ஈழத்தமிழர்களுடைய வாழ்வுரிமையை பாதுகாப்பதே திமுகவின் நோக்கம் என்றும் கருணாநிதி முன்னதாக காலையில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
என்பது தெரியவில்லை.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’