சிங்கள – தமிழ் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்காக தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா இலங்கைக்கு வியஜம் செய்ய வேண்டுமென ஜனதா கட்சியின் தலைவரான சுப்பிரமணியன் சுவாமி இன்று கோரியுள்ளார்.
'தனது சிந்தனைகளில் வங்குரோத்து அடைந்துள்ள கருணாநிதியுடன் தமிழ் வகுப்புவாத மேலாதிக்கப் போட்டியில் ஈடுபடாமல், சிங்கள – தமிழ் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்காக இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவை நான் வலியுறுத்துகிறேன்' என அவர் கூறினார். இலங்கை பாதுகாப்பு அமைச்சு கொழும்பில் நடத்திய சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் சுப்ரமணியன் சுவாமி கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளின் விதைக்கப்பட்ட போலி ஆரிய – திராவிட பிரிவினையின் அடிப்படையிலான சிங்கள – தமிழ் பகைமை பரவியுள்ளது. இது தற்போது தீர்க்கப்பட வேணள்டும் என அவர் கூறினார். தற்போதைய சூழலில் இலங்கைக்கு ஜெயலலிதா விஜயம் மேற்கொள்வது, சிங்கள – தமிழ் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதுடன் இந்திய - இலங்கை பிணைப்பையும் ஊக்குவிக்கும் என அவர் கூறியுள்ளர். ஈழம் குறித்து பேசுவது தொடர்பாக கருணாநிதியை எச்சரித்த சுப்ரமணியன் சுவாமி, அவ்வாறு பேசுவது இந்தியாவின் நட்பு நாடான இலங்கைக்கு எதிராக பிரிவினைவாத சக்திகளுக்கு உடந்தையாகவிருந்தமை முதலான குற்றச்சாட்டுகளின் பேரில் இந்திய தண்டனைக் கோவையின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள வழிவகுக்கலாம் எனக் கூறியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’