வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 23 ஆகஸ்ட், 2012

இந்தியா, சர்வதேச தீர்வுகளை அமுல்படுத்தவும்: சம்பந்தன் கோரிக்கை



லங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் உள்ளுர் தீர்வுகள் பல உருவாக்கப்பட்டன. அவை அமுல்படுத்தப்படவில்லை என்பதால் உள்நாட்டுத் தீர்வு இங்கு பொருந்தாது என்பதுடன் இந்தியா, சர்வதேச தீர்வுகளை அமுல்படுத்தவும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் இன்று புதன்கிழமை சபையில் தெரிவித்தார். நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவது தொடர்பில் சபையில் இன்று ஒத்திவைப்பு வேளை பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். நிறைய விடயங்களை மூடி மறைக்கும் வகையிலே செயற்பாட்டுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இது உலகிற்கு காட்டுவதாக அமைந்தால் முரண்பாடுகளைத்தான் மென்மேலும் வளர்க்கும் என்பதுடன் செயற்பாட்டுத் திட்டத்தை திருத்தாவிடின் நல்லிணக்கம் ஏற்படாது என அவர் மேலும் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’