வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

தேசிய செயற்திட்டம் வெளியிடப்பட்டமைக்கு அமெரிக்கா வரவேற்பு


லங்கை அரசாங்கத்தினால் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகள் அமுலாக்கம் தொடர்பான தேசிய செயற்திட்டம் வெளியிடப்பட்டமையை அமெரிக்கா வரவேற்றுள்ளது. இது தொடர்பில் இலங்கையிலுள்ள அமெரிக்க உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இலங்கை அரசாங்கம், தேசிய செயற்திட்டம் வெளியிட்டமையை ஐக்கிய அமெரிக்கா வரவேற்கின்றது.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளின் முழுமையான நடைமுறைப்படுத்துதலை நாம் நீண்ட நாட்களாக ஊக்குவித்து வந்துள்ளோம். தேசிய செயற்திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தல், நீண்டகால நல்லிணக்கம் மற்றும் நிலையான சமாதானம் ஆகியவற்றை மேலும் வலுவூட்டி அனைத்து குடிமக்களுக்கும் நன்மை பயக்கும் என நாம் நம்புகின்றோம்' என்று அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’