௧
பா ரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கீழான வடகடல் நிறுவனத்தினது செயற்திட்டங்கள் தொடர்பிலான கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
கொழும்பு மருதானையில் அமைந்துள்ள அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் (2) இடம்பெற்ற இக்கலந்துரையாடலின் போது வடகடல் நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் குருநகர், லுனுவில மற்றும் வீரவில ஆகிய மீன்வலை உற்பத்தி நிலையங்களினது முன்னேற்றங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.
இதன்பிரகாரம் கடந்த மூன்று மாத காலத்தினது உற்பத்தி, விற்பனை மற்றும் மிகுதியிருப்பு போன்ற வி;டயங்கள் தொடர்பிலும் எதிர்காலத்தில் உற்பத்திகளையும், விற்பனைகளையும் அதிகரிப்பது தொடர்பில் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
இதனிடையே குருநகரிலுள்ள மீன்வலை உற்பத்தி தொழிற்சாலையில் பழுதடைந்திருக்கும் இயந்திர சாதனங்களை திருத்துதல் இதேபோன்று லுனுவில, வீரவில நிலையங்களில் காணப்படும் பிரச்சினைகளுக்கு உரிய வகையில் தீர்வு கண்டு அதன் மூலம் உற்பத்திகளை அதிகரிப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இதன் போது அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி, அமைச்சரின் ஆலோசகர் ஜெகராஜசிங்கம் உள்ளிட்ட துறைசார்ந்த பலரும் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’