வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 16 ஆகஸ்ட், 2012

இடதுசாரி தலைவரை விமர்சிக்கிறார் ஜனாதிபதி



சென்னையில் அண்மையில் நடந்த தமிழ்ஈழ ஆதரவாளர் மாநாட்டை (டெசோ) மறைமுகமாக குறிப்பிடும் வகையில், இந்த நாட்டில் பிரிவினைவாத சக்திகள் இன்னும் தம் செயற்பாடுகளை கைவிடவில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று புதன்கிழமை எச்சரித்துள்ளார். 'நாம் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்திருந்தாலும் செய்ய வேண்டியவை இன்னும் நிறையவே உள்ளன. நாட்டை பிரிக்க கோரும் தீர்;மானம் ஒன்றை அவர்கள் நாற்பது வருடங்களுக்கு முன் நிறைவேற்றினர். அண்மையில் நடந்த மாநாடும் ஈழக் கோரிக்கைக்கு வலுவூட்டுகின்றது' என ஜனாதிபதி ராஜபக்ஷ குருவிட்டவில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய போது தெரிவித்தார். பிரிவினை கோருவோர் உஷராகுவதை தடுப்பதற்கு முழுநாடும் ஐக்கியப்பட வேண்டிய தேவை உள்ளது என ராஜபக்ஷ கூறினார். நேரடியாக பெயர் குறிப்பிடாதபோதும் டெசோ மாநாட்டில் கலந்து கொண்டமைக்காக இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்தனவை ஜனாதிபதி விமர்சித்தார். தேசப்பற்றுள்ள இலங்கையர்கள், வெளிநாடுகளுக்கு சென்று நாட்டை விமர்சிக்க கூடாது என ஜனாதிபதி கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’