வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

பரிந்துரைகளை அமுலாக்க 24அமைச்சுக்களின் செயற்பாடு ஆரம்பம்: ஜனாதிபதி செயலாளர்



ற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான தேசிய ஆணைக்குழுவினால் முன்மொழியப்பட்டுள்ள 285 பரிந்துரைகளை அமுலாக்க 24 முக்கிய அமைச்சுக்களும் ஏனைய சில அரச நிறுவனங்களும் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதாக ஜனா திபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்தார். இந் நடவடிக்கைகளுக்கு சர்வதேச நாடுக ளும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண் டும். போரின் பின்னர் பாதிக்க ப்பட்ட மக்க ளு க்காக அடிப்படை உதவிகளும் தேவை க ளும் கடந்த மூன்றாண்டில் முழுமையாக பூர் த்தியாகி விட்டுள்ளன. இதனை அனை த்து தரப்புகளும் புரிந்து கொள்ள வேண் டும் ௭ன்றும் அவர் குறிப்பிட்டார். இது குறித்து ஜனாதிபதிச் செயலாளர் லலித் வீரதுங்க தொடர்ந்தும் கூறுகையில், யுத்தத்தின் பின்னர் நாட்டில் நல்லி ண க்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் மிகவும் பங்க ளி ப்புடன் செயற்படுகின்றது. குறிப் பாக ஜனாதிபதியினால் ஸ்தாபிக் கப்ப ட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்து ரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர் பில் அரசு கூடிய கவனம் செலுத்தியுள்ளது. பரிந்துரைகளின் அடிப்படையில் கால வரையறைகள் இட்டு அமைச்சுக்கள் ஏனைய நிறுவனங்கள் ௭ன அனைத்து தர ப்புக்களையும் உள்வாங்கி மிகவும் பரந்த ளவான நடவடிக்கையினையே தற்போது முன்னெடுத்து வருகின்றது. இதனை சர்வதேச நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும். உள்நாட்டில் யுத்தம் முடி வடைந்து குறுகிய காலத்தில் 98 சதவீதமான மக்கள் மீள் குடியமர்த்தப்பட்டு விட்டார்கள். அதே போன்று யுத்தம் நடை பெற்ற பகுதிகளில் மீள் கட்டுமானப் ப ணி கள் வெற்றி கண்டுள்ளன. உள்ளூ ரா ட் சி தேர்தல்கள் நடைபெற்று ஜனநாயகம் அப் பிர தேசங்களில் உறுதிப்படுத் தப்பட் டு ள் ள து. ௭னவே ௭ஞ்சிய விடயங்களையும் விரை வில் பூர்த்தி செய்ய தேவையான நடவடி க்கைகளை பல் தரப்பு அனுசரணையுடன் அரசு முன்னெடுக்கின்றது ௭னக் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’