வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

தாயை தேடி வந்த சிறுமி மீது வல்லுறவு: சந்தேக நபர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்



புறக்கோட்டை பஸ் நிலையத்தில் தனியாக நின்ற 14 வயது சிறுமியை வல்லுறவுக்குட்படுத்தியதாக கூறப்படும் பஸ்தியன் வீதி தனியார் பஸ்நிலைய நடைபாதை வியாபாரிகள் இருவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேக நபர்களை இன்று விடுமுறைகால நீதிமன்ற நீதவான் முன் சிறை அதிகாரிகள் ஆஜர் செய்தனர். பதுளையில் தனது உறவினர்களுடன் வாழ்ந்த இந்த சிறுமி, உறவினர்களுடன் கோபித்துக்கொண்டு தனது தாயைத்தேடி தனியாக கொழும்புக்கு வந்தபோது மேற்படி சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர், தனியாக நிற்பதை கண்ட பஸ்தியன் வீதி நடைபாதை வியாபாரிகளான சந்திரமோகன், ஸ்ரீதரன் ஆகியோர் தாயை காட்டுவதாக கூறி ஒரு முச்சக்கர வண்டியில் சிறுமியை ஏற்றிக்கொண்டு கல்கிசையிலிருந்த தனிமையான ஒரு வீட்டுக்கு கொண்டு சென்றதாக புறக்கோட்டை குற்றப் புலனாய்வுப் பொறுப்பதிகாரி ஏ.ஜி.ரி.எம். விஜேரட்ன நீதிமன்றில் தெரிவித்தார். இவர்கள் பின்னர் இன்னொரு சந்தேக நபருடன் சேர்ந்து மது அருந்திவிட்டு மறுநாள் காலை வரை இச்சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மூன்றாவது சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளார். இந்த சிறுமி முதல் இரண்டு சந்தேக நபர்களையும் அணிவகுப்பில் சரியாக அடையாளம் காட்டியுள்ளார் என பொலிஸார் கூறினர். சந்தேக நபர்களை பிணையில் விடுவிக்கும்படி அவர்களின் நீதவானிடம் வழக்குரைஞர்கள் கேட்டபோதும், சந்தேக நபர்களை தொடரந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’