வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 10 ஜூலை, 2012

தமிழ் மக்கள் சகல உரிமைகளையும் பெற்று கௌரவமாக வாழ வேண்டும் - ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்


மிழ் மக்கள் அரசியல், பொருளாதார ரீதியாக சகல உரிமைகளையும் பெற்று கௌரவமாக வாழ வேண்டும் அதுவே எமது நோக்கம், எமது செயற்பாடுகளும் அதனை நோக்கியே முன்னெடுக்கப்படுகிறது என ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இன்றையதினம் (09) பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வடக்கின் துரித எழுச்சித்  திட்டத்தின் கீழ் ஜம்பது இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட பளை மத்திய பேரூந்து நிலையத்தினை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், எமது மக்கள் சகல வழிகளிலும் தலைநிமிர்ந்த சமூகமாக கௌரவமான வாழ்க்கையை வாழ வேண்டும். நாட்டின் ஏனைய பிரதேசங்களை போன்று எங்களுடைய பிரதேசங்களும் அபிவிருத்திகள் நிறைந்த பிரதேசங்களாகவும் மாறவேண்டும். அதற்காக இந்த மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி என்ற வகையில் நாம் எமது செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்கின்றோம். எமது இந்தச் செயற்பாடுகளுக்கு மக்களின் பூரண ஒத்துழைப்புக்கள் கிடைக்கின்ற போது எமது செயற்பாடுகளும் மேலும் விரிவாக்கப்பட்டு மக்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்தார்.

மேலும் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தின் அபிவிருத்தியின் மற்றுமொரு மைல்கல் இது இந்த மாவட்டத்தில் ஏனைய பிரதேசங்களை விட பச்சிலைப்பள்ளி விரைவான அபிவிருத்தி கண்டு வருகிறது. இதற்கு இந்த பிரதேசத்திலுள்ள அதிகாரிகள், மக்கள் என அனைத்து தரப்பினர்களும் தங்களுடைய முழுமையான ஒத்துழைப்பினை வழங்கி வருகின்றார்கள் குறிப்பாக பச்சிலைப்பள்ளி பிரதேச சபைத் தலைவர் பச்சிலைப்பள்ளியின் அபிவிருத்தி தொடர்பில் எம்மோடு இணைந்து செயற்படுகின்றமை இப் பிரதேசத்தின் விரைவான அபிவிருத்திக்கு மேலும் வலுவூட்டுகிறது எனக் குறிப்பிட்டார்.

பளை மத்திய பேரூந்து நிலையத்தின் இரண்டாம் கட்ட பணிகளுக்கும் விரைவில் நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படுவதோடு சந்தை தொகுதியினை நவீனப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

பச்சிலைப்பள்ளி பிரதேசசபை செயலாளர் சிவப்பிரகாசம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர்கள் அன்ரன் அன்பழகன், தியாகராசா, சுந்தரலிங்கம், சிவராசா, பச்சிலைப்பள்ளி உதவி அரச அதிபர் சத்தியசீலன் கிளிநொச்சி உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ஜக்சீல், மீள்எழுச்சித் திட்ட உதவிப் பணிப்பாளர் விஜயகிருஸ்ணன், பளை பிரதேச வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி மைதிலி, பொலீஸ் பொறுப்பதிகாரி ஜயந்த கமகே பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத் தலைவர் மார்க்கண்டு மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.











0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’