வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 11 ஜூலை, 2012

எல்.ரி.ரி.ஈ. உறுப்பினர்களுக்கு எதிரான வழக்குகள் துரிதப்படுத்தப்படும்



டுப்பிலுள்ள 'வன்வகை' தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் பற்றிய விசாரணைகள், வழக்குகளை துரிதப்படுத்தவும் சிறுகுற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர்களுக்கு புனர்வாழ்வு வழங்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது என பதில் சட்ட மா அதிபர் பாலித பெர்னாண்டோ இன்று கூறினார்.
மூன்று மாதங்களுக்குள் வழக்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்படுமெனவும் இதற்காக நால்வர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் சிலமுன்னாள் தமிழீழ விடுதலைபுலிகள் அங்கத்தினர்கள் குண்டுவெடிப்பு, பொதுமக்களை கொல்லுதல் ,பொருளாதார முக்கியத்துவம் பெற்ற இடங்களை தாக்குதல் ஆகிய கடுமையான யுத்த குற்றங்களை செய்துள்ளனர் என முதல்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பெர்னாண்டோ கூறினார். தமிழீழ விடுதலை புலிகளின் வலையமைப்புடன் பல உறுப்பினர்கள் தொடர்புகளை கொண்டிருந்ததுடன் அரசாங்கம் வழங்கிய புனர்வாழ்வுக்கான வாய்ப்பையும் மறுத்ததால் விசாரணைகள் இலகுவானதாக இருக்கவில்லை எனவும் இவர்கள் அவர் கூறினார். வழக்குத்தொடர வேண்டியவர்களையும் புனர்வாழ்வு வழங்கத் தேவையுள்ளோரையும் மேற்படி குழு பிரித்தெடுக்கவுள்ளது. 'சர்வதேச சமூகம் குறிப்பாக இந்தியா இந்தவிடயத்தில் அக்கறையாக உள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இவ்விடயம் தொடர்பாக அரசாங்கத்துடன் பலசுற்றுப் பேச்சுக்களை நடத்தியுள்ளார். இக்காரணங்களால்தான் வழக்கு தாக்கல் செய்வதையும் புனர்வாழ்வு அளிப்பதையும் விரைவுபடுத்துவதில் அரசாங்கம் அக்கறையாக உள்ளது' என பெர்னாண்டோ கூறினார். வன்வகை தமிழீழ விடுதலை புலிகள் இயக்க உறுப்பினர்கள் 670 பேரும், புனர்வாழ்வுக்குரியவர்கள் என கருதப்படும் 700 பேரும் தடுப்பில் உள்ளனர் என புனர்வாழ்வு மற்றும் சிறைகள் புனரமைப்பு அமைச்சின் செயலளார் எ.திஸநாயக்க கூறியுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’