இலங்கையின் யுத்த வெற்றி அனுபவத்தை சர்வதேச நாடுகளுடன் பகிர்ந்துகொள்ளும் 'இராணுவ கருத்தரங்கு 2012இல் பங்கேற்பதற்கு இந்தியா, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் தனிப்பட்ட ரீதியிலும் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றன என்று இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்தார்.
இந்நிலையில், இந்தியாவின் புதுடில்லியிலிருந்து 19 பாதுகாப்பு ஆலோசகர்கள் இந்த கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக வருகை தரவுள்ளனர் என்றும் இவர்களின் வருகை இலங்கை விசேடத்துவமானது என்றும் இராணுவ தளபதி குறிப்பிட்டார். எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள இராணுவ கருத்தரங்கு 2012 தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு கொழும்பிலுள்ள இராணுவ தலைமையகத்தில் இன்று புதன்கிழமை மாலை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே இராணுவ தளபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’